24
முல்லை :- கொண்டா இப்படி !
(அவள் கையிலிருந்த தூரிகையை வாங்கி, ஒவியக் கோடுகளின் கீழே “ சந்திர வர் மன்’ என்று எழுது
வித்தி :- (மகிழ்ந்து) அடி முல்லை! என் அந்தரங்க மனம் அறிந்தவள் நீ ஒருத்திதானடி என் சுவாமிக்கு இன்னும் என் எண்ணம் தெரியவில்லையே! அந்தப் பெயர் ! அதை ஒரு முறை வாயால் சொல்லடி சொல் !
முல்லை :- சந்திரவர்மன்!
வித்தி :- ஆஃகா சந்திரவர்மன் பெயரைக் கேட் டாலே என்னுள்ளம் பேரின்பம் கொள்ளுதடி சந்திர வர்மன் சந்திரவர்மன் !
(பச்சை புலவனும், மூட்டை முடிச்சு களோடு வெளியூரான் ஒருவனும் வருகின்றனர்.}
பச்சை : சந்திரவர்மன்... வித்தியாவதி அவுரு வல்லே! தோ! அவரது அந்தரங்க நண்பன் பச்சைப் புலவன் வந்திருக்கேன் !
வித்தி : அவர் வரமாட்டாரா ? வரவே மாட் டாரா என் இல்லத்திற்கு? (புதியவரைப் பார்த்து வியந்து) ஆங்! இவர் யார்? எந்த ஊர் ?
பச்சை: இவுரு ஒரு ஓவியக்கலைஞர்! காஞ்சியிலே கொஞ்ச நாளு தங்கி, ஒவியம் வரைஞ்சு மகாராஜா