35
பச்சை :- ஏனுங்க ? கண்ணு, காது, காலு, கையி எல்லாம் ஒண்ணுதானுங்களே?
மைத் :- உணவு?
பச்சை :- மனுஷங்க திங்கறதை ஏழைங்க திங்க ருங்க. பிரபுவுங்க எதைத் திங்கருங்க?
மைத் - தேவர்களின் உணவைச் சாப்பிடுகிரும் கள். தேவர்கள் பாஷையிலேயே பேசுகிறார்கள் ! தேவர் களைப்போல் சுகிக்கிறார்கள் !
பச்சை :- தே வ உணவுன்னு சொன்னிங்க ! பொங்கல், புளியோதரை, தேங்கா, பழம் அது இது ; சரிதான் ! அதென்னங்க தேவ பாஷை ?
மைத் :- மண்டு அது த ண் ட சமஸ்கிருதம்! பவித்திரமான பாஷை மகான்கள்-பக்தர்கள்-உயர்ந்த வர்கள் போற்றிப் பாதுகாக்கும் மேலான பொக்கிஷம் !
பச்சை :- தமிழுங்க !
மைத்: தமிழ் மிகத்தாழ்ந்தது. பாமர மக்களின் பாஷை பகவானுக்குப் புரியாதது!
பச்சை :- கெடையாது, நீங்க சொல்றது தப்பு, (தொலைவில் நோக்கி) சுவாமி தோ ; புலவர் பெருந் தேவனுர் வர்ருர், கொஞ்சம் இருங்க. அவருகிட்டையே கேட்டுடுவோம்.
மைத் : (பார்த்து அஞ்சி) ஐயயோ! பச்சை ! வேண்டாம்! வேண்டாம் விஷப்பரீட்சை (பணம் எடுத்துக் கொடுத்து) இந்தா, இதை வைத்துக்கொள். நாம் பேசியதை அவரிடம் சொல்லி விடாதே!