பக்கம்:நந்திவர்மன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

யங்கட்கு படைத்தலைவன் எல்லப்ப நம்பியோடு தொடர்பு கொள்ளவும்.

இங்ஙனம், பாண்டிய மன்னன்

சிவல்லப தேவன்.

துரோகம் அமைச்சரே ! மாபெரும் துரோகம் ! அண்ணனைக் கொல்வது; ஆட்சியைக் கைப்பற்றுவ தாம் ! எண்ணக் குலை நடுங்கும் ஈனத்தனம்! எப்படித் தான் துணிந்தார் ? அன்பு பெரிதென்றேன் அன்றாெரு நாள் : பரம்பரைக்கும் பங்கமென்றாரே சந்திரவர்மன் : பல்லவப் பரம்பரைக்கும் புகழ் சேர்க்கும் காரியமா இது? அடுக்குமா இந்த அநியாயம்? சந்திரவர்மன் பல்லவப் பெருங் குடியிலே ஒரு பாபி !

லோ : பேசிப் பயனில்லை மகாராணி! தொடங்கி விட்டது சூழ்ச்சிப் படலம்! வெல்ல வேண்டும் பகையை! வேரறுக்கவேண்டும் சதியை !

சங் - அதற்கு என்ன செய்யவேண்டும் மென்கிறீர்? சீலா :- தக்க நடவடிக்கைகளை இப்பொழுதே எடுக்க வேண்டும் வஞ்சகத்தை வாழவிடக் கூடாது ! காட்டிக் கொடுக்கும் கயவர்களைப் பூட்டிவைக்க வேண் டும் சிறைச் சாலையில்.

(ஒரு வீரன் வருகிருன்)

வீரன் :- வணக்கம் மகாராணி !

சங் :- என்ன செய்தி ?

வீரன் :- இளைய மகாராஜா தங்களைப் பார்க்க விரும்புகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/85&oldid=672040" இலிருந்து மீள்விக்கப்பட்டது