காட்சி 20
இடம் : முல்லை வீடு
காலம் : மாலை
(முல்லை பாட்டை முனகியபடி பூ தொடுத் துக் கொண்டிருக்கிருள்.
பச்சை வருகிருன். புதிய கவி ஒன்றை புனைந்தவண்ணம்;
பச்சை : மலர் தொடுக்கும் மங்கையின் கை பூவோ பூவு மகிழ்ந்தேற்கும் ஆடவன் மெய்....? மகிழ்ந்தேற் கும் ஆடவன் மெய்...?
முல்லை : (எழுந்துவந்து கடுப்பாக) சாவோ சாவு!
பச்சை : சபாஷ் ! பூவு-சாவு, பூவுக்கும்-சாவுக்கும் மிகப் பொருத்தம் !
முல்லை : அட பாவி : எ ன் ன ய் ய அர்த்தம்? தமிழை ஏனய்யா இப்படிக் கொலை ப்ண்றே? புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட கதையால்ல நடக்குது! பூவு-சாவுன்னு அடுக்கிட்டாப் போதுமா? அடுக்கு மொழிக்கு அழகு போதுமா? அர்த்தம் வேணுமா?
பச்சை : முல்லை! நான் தமிழ்ப்புலவன். சாக்ரதை!
முல்லை : அது நீயல்ல ; ஒங்கப்பன்! பச்சை எங்கப்பனுக்கு நான் மகனில்லையா?
முல்லை : அப்பன் மகளுக இருக்க அறிவு தேவை யில்லே. தமிழ்ப் புலவகை இருக்க அது தேவையாச்சே :