பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191



143. யூதர்களின் தோல்வி

முஸ்லிம் படைகள் செல்லும் வழியில், ரஜீஅ என்னும் இடத்தில், தங்கள் பொருட்களையும் கூடாரங்களையும் பெண்களையும் இறக்கி விட்டனர்.

அந்த இடமானது, கத்பான் கூட்டத்தார் இருக்கும் இடத்துக்கும், கைபருக்கும் மத்தியில் இருந்தது.

படைகள் எல்லாம் கைபரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றன.

அதை அறிந்த கத்பான் கூட்டத்தார் ஆயுதங்கள் தாங்கி, கைபரை நோக்கிப் புறப்பட்டாகள். ஆனால், சிறிது தூரம் சென்றதும், தங்கள் வீடுகள் எல்லாம் பாதுகாப்பற்று இருப்பதைக் கருதி, உடனே பின் வாங்கி ஊருக்குத் திரும்பி விட்டார்கள்.

கைபரில் ஆறு கோட்டைகள் இருந்தன. அவற்றில் இருபதினாயிரம் போர் வீரர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கோட்டைகளில் மிகவும் உறுதியும், பாதுகாப்பும் உள்ளது அல் கமூஸ் என்னும் கோட்டையே ஆகும்.

அரபு நாட்டின் திறமையான வீரர் மர்ஹப் என்பவர் அந்தக் கோட்டைக்குத் தளபதியாக இருந்தார்.

முஸ்லிம் படை, கைபருக்கு அருகிலுள்ள ஸஹ்பா என்னும் இடத்தை அடைந்தது. மாலை நேரம் ஆகிவிட்டபடியால், அங்கேயே தொழுதார்கள்.

பிறகு அவ்விடத்தை விட்டு புறப்பட்டுக் கைபரை நெருங்கியதும், இரவு நேரமாகிவிட்டது. கைபரிலுள்ள கட்டடங்கள் யாவும், இருளில் படையின் பார்வைக்கு நன்கு புலப்பட்டன.

முன்னேறிச் செல்லாமல், அவ்விடத்திலேயே நின்று கொள்ளுமாறு பெருமானார் அவர்கள் படைக்குக் கட்டளை இட்டார்கள்.

அதன்பின், “ஆண்டவனே, நாங்கள் இந்த நகரத்தினுடையவும், நகர வாசிகளுடையவும், இன்னும் இந்த நகரத்திலுள்ள