பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நபிகள் நாயகம் வழியில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பாண்டிய நாட்டில் கி.பி. 1188-க்கும் கி.பி. 1198-க்கும் இடையில் நிகழ்ந்தவையாகும். ஆனால் இந்தக் காலவரையரையை உறுதிப்படுத்தும் தமிழ்நாட்டு வரலாற்று ஆவணங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்த ஒரு காரணத்தினால் தமிழக வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தித் தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைக்கு உரிய வர்களாகத் தமிழ் முஸ்லீம்களைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வினைப் புறக்கணித்தல் என்பது இயலாத காரியமாகும். மேலே கண்ட நூல்களில் மிகவும் தொன்மையானதாக கருதப்படுவது ஷஹாதத் நாமா என்ற பாரசீக மொழி நூலாகும். இந்த நூல் பெரும்பாலும் கி.பி. 15, 16 - ஆம் நூற்றாண்டுகளில் வரையப் பெற்றிருத்தல் வேண்டும். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் எம்மண்டல முங் கொண்டான் என்ற புகழ் படைத்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியிலும், அடுத்து கொல்லம் கொண்டான் என்ற சிறப்பு விருதுக்குரிய மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியிலும் பாரசீக நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே அரபிக் குதிரை வணிகம் மும்முரமாக நடைபெற்றதை வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காலத்தில் தான் குதிரைகளின் ஒரு பிரிவிற்கு பரி (பாரசீக நாட்டுக்குதிரை) துரகம் (துருக்கி நாட்டுக் குதிரை) கோரம் (கொராசன் நாட்டுக் குதிரை) என்ற பெயர்கள் ஏற்பட்டன என்பது இங்கு நினைவு கொள்ளத் தக்கது. இந்தக் காலக் கட்டத்தில் தமிழகம் வந்து திரும்பிய பாரசீகக் குதிரை வணிகர் ஒருவர் தெரிவித்த செய்திகளின் அடிப்படையில் சுல்த்தான் செய்யது இபுராஹிம் ஷகீது அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றினை ஷஹாதத் நாமா நூலின் ஆசிரியர் தொகுத்திருத்தல் வேண்டும். இந்த வரலாற்றுச் செய்திகள் அனைத்தும் அந்த ஆசிரியரால் தமிழகத்தில் நேரடியாகப் பெறப்பட்டவை அல்ல, செவிவழிச் செய்தி ஆகும். அதனால் அந்த நூலில் தமிழக வர லாற்றின் ஆட்சியாளர்களான கி.பி. 12 - ஆம் நூற்றாண்டு பாண்டியர்களின் பெயர்களைப் பற்றிய செய்திகளும் வரலாற்று