பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 12 வரலாற்று வழித்தடத்தில் இதுவரை இந்தத் தொகுப்பில் வரையப்பட்டுள்ள சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷகீது அவர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் இஸ்லாமிய வரலாற்று நூல்களான ஷகாதத் நாமா (பாரசீக மொழி) சுல்த்தான் செய்யது இபுராகிம் (வலி) அவர்களது பேரில் பாடப் பெற்ற மெளலிது செரீப் (அரபிமொழி), ஏர்வாடி அம்மானை, தீன்நெறி விளக்கம், ஷகீது சரிதை ஆகியவைகளில் சொல்லப்பட்டுள்ளவைகளைப் பின்புலமாகக் கொண்டவை. இந்த நூல்களில் ஒருமுகமாக கீழ்க்கண்ட நிகழ்வுகள் குறிப்பிடப்படு கின்றன. (1) சுல்தான் செய்யது இபுராகிம் அவர்கள் அரபுத் தாயகத்திலிருந்து ஹிஜ்ரி 582 - இல் புறப்பட்டு வந்து காயல் நகரை அடைந்தது. (2) மதுரையிலிருந்த பாண்டியனுடன் போர் புரிந்து மதுரையைக் கைப்பற்றியது. (3) மதுரைக் கோட்டைக்குக் கிழக்கே யுள்ள பவுத்திர மாணிக்கப் பட்டிணத்தில் ஆட்சிபுரிந்த விக்கிரம பாண்டியனுடன் போர்புரிந்து அவனைக் கொன்றது. ஹிஜ்ரி 583 துல்கயிதா பிறை 1.0 (கி.பி. 1188) (4) பவுத்திர மாணிக்க பட்டிணத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தி 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த சுல்த்தான் அவர்களை, விக்கிரம பாண்டியன் வழியினரான திருப்பாண்டியன் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியது ஹிஜ்ரி 594 துல்காயிதா பிறை 23 (கி.பி. 1198). ந. - 7