பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Ο2 நபிகள் நாயகம் வழியில் சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது பாண்டிய நாட்டு வாழ்க்கையில் மிக முக்கியமானதாக கருதப்படுவது அவர்கள் பவித்திர மாணிக்கப் பட்டிணத்தில் ஆட்சி புரிந்து வந்த பாண்டியனை ஹிஜ்ரி 583 - இல் (1.1.1.1188 - இல்) கொன்று அந்த ஆட்சியைக் கைப்பற்றியதும் அங்கு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக ஷரிஅத் ஆட்சி நடத்தியதும் ஆகும். அவர்களது ஆட்சிப்பரப்பு பாண்டிய நாட்டில் எங்கு அமைந்து இருந்தது என்பதை டாக்கா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஏ.க்யூ. ஹசைனி அவர்கள் மட்டும் தமது நூலில் தெளிவாக வரையறுத்துக் காட்டியுள்ளார். அதாவது பாண்டிய நாட்டின் தெற்கே வைப்பாறுக்கும் வடக்கே வைகையாற்றுக்கும் கிழக்கே வங்கக் கடலுக்கும் இடைப்பட்ட முக்கோண வடிவிலான இன்றைய நெல்லை. மதுரை. இராமநாதபுரம் மாவட்டங்களைக் கொண்டது அந்தப் பகுதி ஆகும். பெளத்திர மாணிக்கப் பட்டிணம் என்ற பராக்கிரம பட்டிணத்தைப் பற்றிய செய்திகளை, இலங்கை நாட்டு வரலாறான மகாவம்சமும் பாண்டியரது முதலாவது உள்நாட்டுப் போரினைக் குறிப்பிடுகின்ற கீழ்க்கண்ட வரலாற்று நூல்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். 1) உலகப் பயணி இபுனு பத்துதாவின் பயணக் குறிப்புகள் <su rälstu “Foreign notices of South India" (1948) by K.A. Neelakanda Shastri. 2) Dr.S. Krishnaswamy Ayyangar's The South India and her mohamaden Invaders (1928) 3) Memorial Lecture - by K.K. Pillai (Madras University Series) 1. Hussaini Dr. S.A.Q. - The Pandia Kingdom (1962)