பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 1O3 மற்றும் இந்தப் பவித்திர மாணிக்கப்பட்டினம் இராஜராஜ சோழனது ஆட்சிக் காலத்திலிருந்து பிற்காலம் வரை அதன் பெயரில் மாற்றம் பெற்று பராக்கிரம புரமாகவும் பெரிய பட்டிணமாகவும் மாறியது என்பதை ஆய்வு செய்து எழுதியுள்ள ஆசிரியர் அவர்களது கட்டுரையைத் தாங்கிய தமிழ்நாட்டு வரலாற்றுக் கருத்தரங்குக் கோவை 1980 (டாக்டர். ஆர். நாகசாமி அவர்கள் பதிப்பு) - இல் காணலாம். மேலும் இந்தப் பவித்திர மாணிக்கப்பட்டிணம் எங்கு அமைந்திருந்தது என்பதை மாறவர்மன் சுந்தரபாண்டியனது திருப்புல்லாணித் திருக்கோயில் கல்வெட்டும் அறுதியிட்டுக் குறிப் பிட்டுள்ளதை ஏற்கனவே இயல் 10 - இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே கண்ட இத்துணை வரலாற்று ஆதாரங்கள் வரலாற்றில் பதிவு பெற்றிருந்தும் சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் பெளத்திர மாணிக்கப் பட்டிணத்தில் கி.பி. 1188 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தன்னரசு ஆட்சி ஒன்றை நிறுவியிருந்ததை தமிழக வரலாற்றில் இடம் பெறாதது விந்தையான செய்தியே ஆகும். இத்தகைய தமிழக வரலாற்றில் விடுபட்டுள்ள இன்னொரு செய்தியினை இங்குக் குறிப்பிடுதல் பொருத்தமானதாக இருக்கும். கி.பி. 1165 முதல் பாண்டிய நாட்டில் தொடர்ந்த உள்நாட்டுப் போரில் பராக்கிரம பாண்டியனுக்கும் அவனது இளவல் வீரபாண்டியனுக்கும் உதவுவதற்காக இலங்கையிலிருந்து பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலத்திலும் அவனது மருமகன் நிசங்க மல்லனது ஆட்சிக் காலத்திலும் பாண்டிய நாட்டிற்கு இராமேஸ்வரம் தீவு வழியாக உதவிப் படைகள் வந்தன. இந்தப் போர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் நீடித்த போது இலங்கைப் படைகளின் ஒரு பகுதி இராமேஸ்வரம் தீவினை முழுமையாகக் கைப்பற்றி வைத்திருந்தனர் என்பது வரலாறு. இதனை எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டு வரையவில்லை என்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.