பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 1 3 ஹிஜ்ரி ஆண்டை கிறிஸ்தவ சகாப்தத்துடன் கணக்கிடுதல் மனித சமுதாயம் தோற்றம் பெற்ற காலத்தை இதுவரை யாரும் வரையறுத்துச் சொல்லவில்லை என்றாலும் மனிதன் விலங்கின வாழ்க்கையிலிருந்து முதிர்ச்சியும் அனுபவமும் பெற்றுப் பல நூறு ஆண்டுகள் ஆனபிறகு நமது உள்ளக்கருத்தைப் பிறருக்கு வெளியிட வேண்டும் என்ற இயற்கை உந்துதலினால் ஒலிக் குறிப்புகளைக் கொண்டு பேச்சு மொழியையும், பின்னர் அதற்குரிய வரிவடிவங் களான எழுத்துக்களையும் கண்டுபிடித்தான். இத்துடன் அமையாமல் தமது அனுபவ முதிர்ச்சியையும் நாகரிக வாழ்க்கையையும் வரையறுத்துச் சொல்வதற்கு எண்களையும் கண்டுபிடித்துள்ளான். இந்த எண்களுக்கும் உலகின் பல பகுதியிலுள்ள மக்கள் தாங்கள் பேசும் மொழியிலேயே இந்த எண்களுக்கான வரி வடிவினையும் அமைத்தனர். பொதுவாக இன்று உலகம் முழுவதும் இந்த எண்கள் ரோமர்களது எழுத்திலும் எடுத்துக்காட்டாக, (I, II, III, IV, V, V, VII, VIII, IX, X) அரபுப் மொழியிலும் (எடுத்துக்காட்டாக 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10) எழுதப்பட்டு வழக்கத்தில் இருந்து வருகின்றன. இதேபோல தமிழ் எண் வரிசையை 1 முதல் 10 வரை குறிப்பிட க.உங்,சரு.சு.எ.அ.கூ.ய தமிழ் எழுத்துக்களிலேயே குறிக்கப்பட்டு வருகிறது.