பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O6 நபிகள் நாயகம் வழியில் இந்த எண்கள் நாட்களையும் மாதத்தையும் வருடத்தையும் கணக்கிடுவதற்குப் பயன்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுகளை நூறு வரை உள்ள காலத்தை நூற்றாண்டு என்றும் அதற்கும் மேலே பல நூற்றாண்டுகளைக் குறிப்பதற்கு சகாப்தம் அல்லது யுகம் என்று பெயரிடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுகளை நூற்றாண்டு கணக்கில் வரையறுக்கப்பட்ட பஞ்சாங்கம் பல நாடுகளிலும் வெவ்வேறு விதமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய வரலாற்றினைக் குறிப்பிடுவதற்கு பெரும்பாலும் கிறிஸ்தவ சகாப்தம் தான் கிறிஸ்து விற்குப் பின்னர் (கி.பி) கிறிஸ்துவுக்கு முன்னர் (கி.மு.) எனப் பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கிறிஸ்துவ சமயம் பரவியிருப்பதால் இந்தப் பழக்கம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஏனைய நாடுகளும், தங்களுக்கென தனியாக சகாப்தங்களைக் கொண்ட பஞ்சாங்கத்தினை வைத்திருந்த பொழுதும் இந்த கி.பி. கி.மு. கணக்கையே பொதுப் பஞ்சாங்கக் கணக்காக ஏற்றுக் கொண்டுள்ளன. தமிழ் நாட்டின் வரலாற்றை வரையறுத்துக் கூறுவதற்கு சக ஆண்டு என்ற முறையைப் பின்பற்றி வருகிறோம். இந்த முறையின்படி கிறிஸ்தவ ஆண்டிற்கும் சக ஆண்டிற்கும் கால வேறுபாடு 78 ஆண்டுகள் என்பது இங்கு நோக்கத்தக்கது. இதுவரை எழுதப்பட்டுள்ள சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகளில் முக்கிய நிகழ்வு களுக்கு அரபு நாட்டுப் பஞ்சாங்கமான ஹிஜ்ரி ஆண்டைப் பற்றிய சில செய்திகளை வாசகர்கள் அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. ஹிஜ்ரி என்பது இன்றைய அரபி நாட்டவரின் ஆண்டுக்கணக்கை, பஞ்சாகத்தைக் குறிக்கும் சொல் ஆகும். கி.பி. 7 - ஆம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் ஸல்லல்லாகு அவர்கள் மதின மாநகரில் 17 ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த பிறகும் கூட அரபிகளுக்குத் தனியாக பஞ்சாங்கம், ஆண்டுக் கணக்கு ஒன்று இருந்தது இல்லை. இந்தக்