பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 1Ο7 குறைபாட்டினை நபிகள் நாயகம் அவர்களுக்குப் பின்னர் இரண்டாவது கலிபாவாக பதவியேற்ற உமர்கத்தாப் அவர்கள் உணர்ந்தார்கள். அதுவரை அரபு நாட்டின் ஆண்டுகளுக்குத் தனித் தனியாகப் பெயர்கள் மட்டும் தான் எடுத்துக்காட்டாக யானை ஆண்டு, நில அசைவு ஆண்டு, அனுமதி ஆண்டு என்ற பெயர்கள் இருந்து வந்தன. கலிபா உமறு கத்தாப் அவர்கள் மதின நகர் தோழர்களை அழைத்துப் பேசி தமது நாட்டு ஆண்டுப் பஞ்சாங்கத்தை நிர்ணயிப்பது சம்மந்தமாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன் வழி அனைத்துத் தோழர்களும் ஏற்றுக் கொண்ட ஒருமித்த கருத்தில் ஹிஜ்ரி ஆண்டு பிறந்தது. நபிகள் நாயகம் ஸல்லல்லாகு அவர்கள் மக்க மாநகரிலும் அதனைச் சுற்றிய பகுதிகளிலும் பல ஆண்டுகள் மக்களைச் சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டும் அவர்களுக்கு அருளப் பெற்ற திருக்குர்ஆன் வசனங்களை விளக்கிச் சொல்லுவதிலும் பயன் ஏதும் ஏற்படாமல் அன்னவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் மக்கா நகரை விட்டு மதின நகரைப் போய்ச் சேர்ந்ததை இந்த ஹிஜ்ரி ஆண்டு குறிப்பிடுவதாகும் எனப் பலர் நம்பி வருகின்றனர். நபிகள் நாயகம் அவர்கள் மதின மாநகர் சேர்ந்த நாள் அரபி மாதம் ரபிஉல் அவ்வல் 12-ம் தேதி. இந்த நாளுக்கு முன்னதாக அமைந்த சபர்மாதம். முஹர்ரம் மாதம் ஆகியவைகளின் மொத்தம் 69 நாட்களை அதாவது நபிகள் நாயகம் அவர்கள் மதினம் வந்த நாளிலிருந்து முன்னதாக உள்ள 69-வது நாளில் ஹிஜ்ரி ஆண்டு முஹர்ரம் மாதத்தில் தொடக்கம் பெறுவதாக நிர்ணயம் செய்தார்கள். கிறிஸ்தவ சகாப்தத்தின்படி இந்த நாள் 16.07.622 ஆகும் என ஆங்கில நாட்டு கலைக்களஞ்சியமான பிரிட்டானிகா என்சைக்ளோ பீடியா என்ற தொகுதியில் வரையப்பட்டுள்ளது. சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளை ஹிஜ்ரி ஆண்டில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் பட்டுள்ளன.