பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OՑ நபிகள் நாயகம் வழியில் 1) சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் மதின மாநகரில் பிறந்தது ஹிஜ்ரி 530 ரமலான் பிறை - 3. 2) மேற்படியாரது திருமண விழா நடந்தது ஹிஜ்ரி 555, 3) ஜித்தா துறைமுகத்திலிருந்து பாண்டியநாடு புறப்பட்டது ஹிஜ்ரி 582, ஜமாதுல் ஆகிர். 4) மேற்படியார் காயல் நகர் வந்து சேர்ந்தது ஹிஜ்ரி 583. 5) பெளத்திர மாணிக்கப்பட்டிணத்தில் விக்கிரம பாண்டியனை வென்று ஆட்சியை ஏற்படுத்தியது. துல்கயிதா பிறை 10 ஹிஜ்ரி 583. 6) திருப்பாண்டியன் போரில் அவர்களை வென்று கொன்றதினால் வீர மரணம் எய்தியது, துல்கயிதா பிறை 23. ஹிஜ்ரி 594, சுல்த்தான் அவர்களது வாழ்க்கையினை விவரிக்கும் ஒரே நூலான ஷகீது சரிதை (பதிப்பு ஆண்டு 1953) - இல் கொடுக்கப் பட்டுள்ள மூன்று நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கிற்கு உரிய ஆங்கில ஆண்டு திங்கள், நாள் ஆகிய விவரங் களைக் கணக்கிட்டு கீழே கொடுத்துள்ளோம். இந்தக் கணக்கீட்டிற்குக் பயன்பட்ட ஆங்கில நூல். "Conversion of Hijiri year into Christian Year" மேலே கண்ட நூலில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று அட்டவணைகளையும் முறைப்படி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அட்டவணைகளின் அடிப்படையில் ஹிஜ்ரி ஆண்டுக்குரிய கிறிஸ்தவ ஆண்டு, திங்கள், நாள் ஆகியவைகளை எவ்விதம் கணக்கிடலாம் எனப் பார்ப்போம்.