பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நபிகள் நாயகம் வழியில் சுல்த்தான் அவர்களது பிறப்பு ஹிஜ்ரி 580 ரமலான் பிறை 3-க்குச் சரியான கிறிஸ்தவ ஆண்டு கணிக்கப் பட்ட முறை: ஹிஜ்ரி 550-க்குச் சமமான கிறிஸ்தவ ஆண்டுக் காலம் அட்டவனை 1-ன் படி அக்டோபர் 1135. இந்த ஆண்டு கி.பி. 1135 அக்டோபர் 11-வுடன் 283 நாட்கள்ை அட்டவணை 1-ன் படி சேர்க்கவும். பிறகு ரமலான்பிறை 3 - ஆம் தேதிக்கு அட்டவணை 3 - இன்படி மொத்தம் 239 நாட்கள் ஆகின்றன. மேற்கண்ட 283 உடன் 239 நாட்களைச் சேர்த்தால் 283 + 239 = 522 நாட்கள் ஆகின்றன. இதில் ஒராண்டிற்கான மொத்த நாட்கள் 365-ஐ கழிந்தால் 522 - 365 - 157 நாட்கள் எஞ்சியுள்ளது. அட்டவணை 2-ன்படி 157 நாட்களுக்குரிய கிறிஸ்தவ ஆண்டுக்காலம் ஜூன் 6-ம் தேதி ஆகும். ஏற்கனவே கழிக்கப்பட்ட 365 நாட்களை முன்னர் கண்டுபிடித்த கி.பி. 1135 உடன் சேர்த்தால் கிறிஸ்தவ ஆண்டு கி.பி. 1136 ஆகிறது. ஆதலால் ஹிஜ்ரி 550 ரமலான் பிறை 3-க்குச் சரியான கிறிஸ்தவ ஆண்டுக்காலம் ஜூன் மாதம், 6-ம் தேதி. 1136 ஆகும். 2) சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் விக்கிரம பாண்டியனைக் கொன்று பவித்திர மாணிக்கப்பட்டிணத்து ஆட்சியைக் கைப்பற்றியது ஹிஜ்ரி 583 துல்காயிதா பிறை 10-க்குச் சரியான கிறிஸ்தவ ஆண்டுக்காலம் கணிக்கப்பட்ட முறை: