பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 125 ஹிஜ்ரி 583 -க்குச் சரியான கிறிஸ்தவ ஆண்டுக்காலம் அட்டவணை 1-ன்படி மார்ச் 13, 1187 ஆகும். இந்தக் காலத்துடன் 71. நாட்களைக் அட்டவணை 1-இன் படி சேர்க்கவும். பிறகு துல்கயிதா பிறை 10-க்கு அட்டவணை 3-இன் படி மொத்தம் 305 நாட்கள் ஆகின்றன. மேற்கண்ட 71 நாட்களுடன் 305 நாட்களைச் சேர்த்தால் 71 + 305 = 376 நாட்கள், இதில் ஓராண்டிற்கான 365 நாட்களை கழித்தால் 376 - 365 = 11 நாட்கள் எஞ்சியுள்ளன. அட்டவணை 2-ன்படி 11 நாட்களுக்குரிய கிறிஸ்தவ ஆண்டுக்காலம் ஜனவரி 11-ம் தேதி ஆகும். ஏற்கனவே கழிக்கப்பட்ட 365 நாட்களை கி.பி. 1187 உடன் சேர்த்தால் 1187 + 1 = 1188 என்ற கிறிஸ்தவ ஆண்டு ஆகின்றன. ஆதலால் ஹிஜ்ரி 583 துல்கயிதா பிறை 10-க்குச் சரியான கிறிஸ்தவ ஆண்டுக்காலம் ஜனவரி மாதம், 11-ம் தேதி, 1188 ஆகும. 3) சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் பெளத்திர மாணிக்கப்பட்டிணப் போரில் பாண்டியனுடன் பொருதி வீரமரணம் எய்திய ஹிஜ்ரி 594 துல்கயிதா பிறை 23-க்கு சரியான கிறிஸ்தவ ஆண்டு காலம் கணக்கிடப்பட்ட முறை ஹிஜ்ரி 594-க்குச் சரியான கிறிஸ்தவ ஆண்டுக்காலம் அட்டவணை 1 - இன் படி நவம்பர் 13, 1197 ஆகும். இந்தக் காலத்துடன் 316 நாட்களை அட்டவணை 1 - இன் படி சேர்க்கவும். பிறகு துல்கயிதா பிறை 23-க்கு அட்டவணை 3 - இன் படி மொத்தம் 318 நாட்கள் ஆகின்றன. மேற்கண்ட 316 நாட்களுடன் 318 நாட்களைச் சேர்த்தால் 316 + 318 = 634 நாட்கள் ஆகின்றன.