பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நபிகள் நாயகம் வழியில் இதில் ஒராண்டிற்கான 365 நாட்களைக் கழித்தால் 634 - 365 = 269 நாட்கள் எஞ்சியுள்ளன. அட்டவணை 2-ன்படி 269 நாட்களுக்குரிய கிறிஸ்தவ ஆண்டுக்காலம் செப்டம்பர் 26-ம் தேதி ஆகும். ஏற்கனவே கழிக்கப்பட்ட 365 நாட்களை கி.பி. 1197 உடன் சேர்த்தால் 1197 + 1 = 1198 என்ற கிறிஸ்தவ ஆண்டு ஆகும். ஆதலால் ஹிஜ்ரி 594, துல்கயிதா பிறை 23-க்குச் சரியான கிறிஸ்தவ ஆண்டுக்காலம் செப்படம்பர் மாதம் 26 - ஆம் தேதி, 11.98 ஆகும். இந்த விளக்கங்களின்படி சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கான ஹிஜ்ரி ஆண்டு முறையைக் கணித்துக் கொள்வதில் எவ்வித இடர்பாடும் இருக்காது. காரணம் இந்த முறை இறுதியாக வானியல் வல்லுநர்களால் கி.பி. 1984-ல் வகுக்கப்பட்டது ஆகும். இந்த உண்மையான ஹிஜ்ரி ஆண்டிற்கு ஏற்ற கிறிஸ்தவ ஆண்டினை புறக்கணித்து விட்டு, கி.பி. 1984-ல் வெளியிடப்பட்ட தீனெறி விளக்க நூலின் பதிப்பாசிரியர் ஆய்வுரை என்ற தலைப்பில் சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் என ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். சம்மந்தப்பட்ட ஹிஜ்ரி ஆண்டுகளுக்கு ஏற்புடையதான ஆங்கில ஆண்டு, திங்கள், நாள் உடன் வெளியிட்டுள்ளார். இந்த தீன் விளக்கக் காப்பியத்தில். அதனை இயற்றிய ஆசிரியர் மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் எந்த நிகழ்ச்சிக்கும் உரியதான ஹிஜ்ரி ஆண்டுகளைத் தமது நூலில் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்நூலின் பதிப்பாசிரியர் அந்த ஹிஜ்ரி ஆண்டுகளுக்குரியதாக ஆங்கில ஆண்டு, திங்கள், நாள் ஆகியவைகளை எந்த அடிப்படையில் கணக்கிட்டுக் கொடுத் துள்ளார் என்பது தெரியவில்லை.