பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயன் - 14 நிறைவு வரிகள் சுல்த்தான் செய்யிது இபுராகிம் அவர்களது வாழ்க்கை வரலாற்றினை அறிவிக்கின்ற இஸ்லாமிய நூல்களில் இன்னொரு முக்கியச் செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுல்த்தான் அவர்கள் பெளத்திர மாணிக்கப்பட்டினப் போரில் பாண்டியருடன் ஏற்பட்ட வாள் சண்டையில் ஷகீதானார்கள் என்பதும் அவர்களை எதிர்த்துக் கொன்ற பாண்டியனும் போரில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் பின்னர் இறந்து விட்டான் என்பதும் அவனது வழித் தோன்றலான சமர கோலாகல பாண்டியன் ஷகீது அவர்களது குடும்பத்தினரை மிக்க மரியாதையுடன் நடத்தி இன்றைய ஏர்வாடிப் பகுதியை ஆட்சி செய்யவும் அனுமதித்தான் என்பதும் ஆகும். ஷகீது அவர்களது இரண்டாவது குமாரரான முகம்மது இஸ்காக்கும் அவரது வழியினரும் ஹிஜ்ரி 594-லிருந்து ஹிஜ்ரி 673 வரை அந்தப் பகுதியில் இருந்து வந்தனர். அவர்களின் இளவல் செய்யது அகமது காலத்தில் கடல்பெருக்கு ஏற்பட்டு ஏர்வாடிப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தது. இதன் காரணமாக செய்யது அகமதுவும் அவரது குடும்பத் தினரும் மதுரை மாநகருக்கு மேற்கேயுள்ள கணவாய் என்ற கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். சுல்த்தான் அவர்களைப் பெளத்திர மாணிக்கப் போரில் கொன்ற சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் (கி.பி. 1190 - 12.18)