பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நபிகள் நாயகம் வழியில் பிறகு பட்டத்திற்கு வந்த சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியின் பொழுது இந்தக் குடும்பத்தினர் மீண்டும் ஏர்வாடிப் பகுதிக்கு வந்து நிலையாகத் தங்கினர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் முருசல் இபுராஹிம் என்பவராவார். இவர் சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷகீது அவர்களது அடக்கவிடத்தை மறு அமைப்புச் செய்தார் என ஷகீது சரிதை நூல் தெரிவிக்கிறது. மேலேகண்ட இஸ்லாமிய வரலாற்றுச் செய்திகளின் படி ஏர்வாடிப் பகுதியை ஷகீது அவர்களது வழித் தோன்றல்கள் ஹிஜ்ரி 594 முதல் 673 வரை (கி.பி. 11.98 முதல் - கி.பி. 1278 வரை) ஆட்சி செய்தனர் என்பதற்குத் தமிழக வரலாற்றில் எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை. மேலும் இந்தக் குடும்பத்தினர் ஹிஜ்ரி 673-ல் மதுரையை அடுத்த கணவாய் கிராமத்திலும் பின்னர் சேதுநாட்டின் வடபுறத்தில் உள்ள கிளியூரிலும் சென்று தங்குவதற்கு உரிய சிறப்பான காரணங்கள் எவை என்பதும் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. இதற்கான ஆவணங்களும் தற்பொழுதைய ஏர்வாடி தர்ஹா நிர்வாக அலுவலகத்தில் இல்லை. மற்றுமொரு குழப்பமான செய்தி ஷகீது சரிதையில் ஏர்வாடி தர்ஹா செரீபை முருசல் இபுராஹிம் அவரது குமாரர் நல்ல இபுராஹிமும் அமைத்தார் என்ற செய்தி காணப்படுகிறது. கி.பி. 1742-ல் இராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி ஏர்வாடிப் பள்ளிவாசலுக்கு வழங்கிய செப்புப் பட்டையத்தில் நல்ல இபுராகிம் என்று தர்ஹா நிர்வாகியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சடையவர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சி யில் (கி.பி. 1216 - 1232) முருசல் இபுராஹிம் கணவாய் கிராமத்தி லிருந்து கிளியூர் கிராமத்திற்கும் பின்னர் ஏர்வாடிக்கும் குடிபெயர்ந் துள்ளார் என்றும் அவரது குமாரர் நல்ல இபுராஹிம் என்றும் தெரிய வருகிறது. இந்தச் செய்தியும் வரலாற்றிற்கு பொருத்தமானதாகக் காணப்படவில்லை. அதாவது சடையவர்மன் சுந்தரபாண்டியனது