பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 15 சுல்த்தான் செய்யது இபுராகிம் (ஷகிது) அவர்களைப் பற்றிய இலக்கியங்கள் 1) வடிஹாதத் நாமா: பாரசீக மொழியில் வரையப்பட்டுள்ள நூல், இதன் ஆசிரியர் அப்பாஸ் பின் அப்துல்லா என்பவர். இந்த நூல் வரையப்பெற்ற அல்லது வெளியிடப்பட்ட ஆண்டு எது எனத் தெரியவில்லை. பெரும்பாலும் கி.பி. 15 - ஆம் நூற்றாண்டில் வரையப் பெற்றிருக் கலாம் என ஊகிக்கப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர் நமது நாட்டிற்கோ அல்லது நமது நாட்டின் தென்பகுதியான பாண்டிய நாட்டிற்கோ நேரில் வந்ததாகச் செய்திகள் இல்லை. என்றாலும் அப்பொழுது பாண்டிய நாட்டிற்கும் அரபி, பாரசீக நாடுகளுக்கு மிடையே குதிரை வாணிபம் மும்முரமாக நடந்து வந்த பொழுது இங்கிருந்து திரும்பிய குதிரை, வணிகர் ஒருவர் அளித்த விவரங் களைக் கொண்டு இந்த நூல் தொகுக்கப் பெற்றுள்ளது. ஆதலால் இந்த நூலில் பாண்டிய நாட்டு வரலாற்றுக்கு முரணான செய்திகள் பல இடம் பெற்றுள்ளன. குறிப்பாகச் சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் பாண்டிய நாடு வந்த பொழுது இங்கு