பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 1Յ1 ஆட்சியிலிருந்த பாண்டியரது பெயர்கள், அவர்களுடன் சுல்த்தான் போரிட்ட விபரம், அவர்களை அழித்துப் பத்தாண்டுகளுக்கு மேலாக பாண்டிய நாட்டின் ஷரிஅத் ஆட்சி நடைபெற்ற விபரங்கள் எல்லாம் பாண்டிய நாட்டு வரலாற்றில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த நூல் இஸ்லாமியரது ஹிஜ்ரி ஆண்டினை ஒட்டி எழுதப் பெற்றிருப்பதால், அந்த ஆண்டுகளுக்கு நேரான கிறிஸ்தவ ஆண்டினைக் கண்டுபிடித்து நிகழ்ச்சிகளைச் சரிபார்க்க வேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளது. i சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது வாழ்க்கையினை விவரிக்கும் பழைய நூலாக இருப்பதால் இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 2) ஏர்வாடி அம்மானை: தமிழில் வரையப் பெற்ற சுல்தான் செய்யது இபுராகிம் பற்றிய பழமையான நூல் இது ஒன்றே ஆகும். இந்த நூலின் அடிப்படை யிலேயே பிற்காலத்தில். கி.பி. 19 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அம்மானையாக இருந்ததை பாடுவதாக புலவர் வண்ணக் களஞ்சியம்' அவர்கள் தமது நூலாகிய "தீனெறி விளக்கத்தின்' தொடக்கத்தில் வரைந்துள்ளார். தமிழ் இலக்கியங்களில் அம்மானை என்ற சிற்றிலக்கியங்கள் கி.பி. 16 - ஆம் நூற்றாண்டு முதல் தொடக்கம் பெற்றிருப்பதால் இந்த நூலும் கி.பி. 16, 17 - ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டு இருத்தல் வேண்டும். இந்த நூல் இதுவரை அச்சில் வெளியிடப்படவில்லை. ஏட்டுச் சுவடிகளாக இருந்த இந்த நூலினை கி.பி. 1981- இல் மதுரையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை ஒட்டி அச்சிடு வதற்காகத் தமிழ்நாடு தொல் பொருள் துறையினர், ஏர்வாடியி லிருந்து பெற்றுச் சென்றார்கள். இந்த நூலும் இதுவரை அந்தத் துறையினரால் வெளியிடப்படவில்லை. சுவடிகளும் என்ன வாயிற்று என்பதை அவர்களால் தெரிவிக்க முடியவில்லை.