பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 1Յ5 ஹிஜ்ரி 541 என்றும் தமிழ் நாட்டிற்கு புறப்பட்டது ஹிஜ்ரி 581 என்றும், அவர் வீரமரணம் அடைந்தது ஹிஜ்ரி 596 என்ற விவரங்களைக் குறிப்பிட்டு அன்னாரது வரலாற்றில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் இந்த அரபி இலக்கியம் சில புதிய செய்திகளையும் அறிவிப்பதாக உள்ளது. 1) சுல்த்தான் செய்யது இபுராகிம், அவர்களது கலீபா அலி அவர்களது தொடக்கம் முதல் வழியினர் யார் யார் என்பதும் அவர்களது பெயர்கள் எவை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. 2) பாண்டிய நாட்டிற்குப் புறப்படும் பணிக்கு அப்பொழுது ரோமாபுரியில் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர் மஹ்முத் என்பவர் படை உதவி செய்த விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. 3) சுல்த்தான் அவர்கள் பாண்டிய நாடு புறப்படும் பொழுது அவரைத் தொடர்ந்த அவரது குடும்பத்தினர் பெண்கள் உட்பட 174 பேர்களைப் பற்றிய விபரங்களையும் கொடுக்கப்பட்டுள்ளது. 4) காயல்பட்டிணத்தில் சுல்த்தான் அவர்கள் தங்கிய விவரம் இல்லை. மேலாக மத்ஹர் (மதுரை) சென்று பாண்டியனுடன் போரிட்டதாகவும், பின்னர் அவனை வெற்றி கொண்டு அங்கேயே ஆட்சி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 5) மேலும் சுல்த்தான் அவர்களைப் பாண்டியன் பெளத்திர மாணிக்கப்பட்டிணத்தில் வெற்றி கொண்டதாகக் குறிப்புகள் ஏதும் இல்லை. 9) அரபி மொழியில் சுல்த்தான் அவர்கள்மீது இயற்றப்பட்ட கவிதைகள். (கசீதாக்கள்) 1. கீழக்கரை டவுன் காஜி மக்தூம் பஹாவுத்தீன். 2. கீழக்கரை டவுன் காஜி ஷெய்கு அப்துல்லாஹ்

  • ్మ*