பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நபிகள் நாயகம் வழியில் ஏர்வாடி தர்ஹாவில் டிரஸ்டியாக இருந்த மு.வா. முஹம்மது இப்ராஹிம் லெப்பை ஆவார். ஏற்கனவே ஏர்வாடி சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களில் ஷகாதத் நாமாவின் செய்திகளை உள்ளடக்கியது ஆகும். சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உள்ளது. அன்னாரது பிறப்பு, தமிழகத்திற்கு வந்தது. ஷகீதானது ஆகிய விவரங்களையெல்லாம் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலினையே பின்பற்றி பிற்காலத்தில் பல உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவைகளில் புதுமையான செய்தி எதுவும் இல்லை. 8) ஏர்வாடி சுல்த்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது மெளலிது ஏர்வாடி ஷகீது அவர்களைப் பற்றி அரபு மொழியில் இயற்றப்பட்டுள்ள ஒரே நூலாகும் இது. இதன் ஆசிரியர் கீழக்கரை அரூஸியா மத்ரஸாவைச் சேர்ந்த மெளலவி செய்யது அஹமது ஆலிம் லெப்பை அவர்கள். இதன் காலம் ஹிஜிரி 1252. ஷகீது அவர்களைப் பற்றிய பரம்பரை, பிறப்பு. கல்வி, சமயப்பணி தமிழக வருகை, ஏர்வாடியில் தியாகியானது வரையுள்ள வாழ்வின் நிகழ்வுகளை இந்த நூல் 13 அத்தியாயங் களில் (ஹிகாயத்) விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் இந்த நூலினை இயற்றுவதற்குப் பல பாரசீக மொழி நூல்களையும், காயல்பட்டிணம் உரைசு ஆலிம் அவர்களது ரவ்ளிற்றயாஹீன் என்ற நூலையும், ஏர்வாடி அம்மானை, ஏர்வாடி படைப்போர் ஆகிய தமிழ் நூல்களையும் மற்றும் அப்பொழுது வழங்கிய பல செவிவழிச் செய்திகளையும் ஆதாரமாகக் கொண்டு இயற்றியுள்ளார். இந்த நூலில் காணப்படும் சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது பிறப்பு மற்றும் அவர்கள் தமிழகம் வந்தது போன்ற செய்திகளில் பல முரண்பாடுகள் இருப்பது தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாக சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களது பிறப்பு