பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 133 காப்பியத்தையும், கி.பி 1814-ல் குத்புநாயகம் என்ற காப்பியத்தையும், கி.பி. 1821-ல் இந்த தீனெறி விளக்கத்தையும் இவர் பாடியுள்ளார். இவர் சில காலம் நாகூரிலும் அதனை அடுத்த பொறையாரிலும் வாழ்ந்து வந்தார் என்பதும், நாகூர் தர்ஹாவின் ஆஸ்தான கவிஞராக இருந்து வந்தார் என்பதும் அவரைப் பற்றிய செய்திகள் ஆகும். இவரது கடைசிக் காலத்தில் ஒருநாள் தொண்டி நகர் சென்றுவிட்டு பல்லக்கில் திரும்பி வரும் பொழுது இராஜசிங்க மங்கலத்தை ஒட்டிய தும்படைக்கா கோட்டை என்ற சிற்றுரில் காலமானார். அவரது அடக்கவிடம் அங்கே அமைந்துள்ளது. அந்த இடம் இப்பொழுது இருதயபுரம் என அழைக்கப்படுகிறது. 5) தீன் விளக்கச் சந்தமாலை: இந்தச் சிற்றிலக்கியம் இளையாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சீனி ஆபில் புலவர் என்பவரால் இயற்றப் பெற்று வெளிவந்துள்ளது. கி.பி. 19 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நூலும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை என்பது வேதனைப்படத்தக்க செய்தியாகும். 6) ஏர்வாடி ஏந்தல் ஏர்வாடி சுல்த்தான் செய்யிது இபுராகிம் பற்றி இயற்றப்பட்ட கவிதை நூல் இது. தீன் விளக்க சந்தமாலை ஆகிய இலக்கியத்திற்கு நூறாண்டுகற்குப்பிறகு வெளி வந்துள்ள இலக்கிய நூலாகும். அந்தாதி இலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் ஆசிரியர் அதிராம் பட்டிணத்தைச் சேர்ந்த அருட்கவி முஹம்மது தாஹா என்பவராவார். கி.பி. 2001ல் அந்தாதித் தொடையாக நூறு கவிதைகளைக் கொண்டது. 7) வடிகீது சரிதை: 1952ல் தமிழில் வெளிவந்துள்ள ஷகீது பற்றிய முதலாவது தமிழ் உரைநடை நூலாகும். இதனை வரைந்து வெளியிட்டவர்