பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - I தொடக்கம் வளமையும் செழுமையும் மிக்க பழந் தமிழகத்திற்குப் பல்வேறு நாடுகளிலிருந்து வணிகர்களும் பயணிகளும் சமயப் பிரச்சாரர்களும் பல காலங்களில் வந்து சென்றதை வரலாறு தெரிவிக்கின்றது. இவர்களில் வரலாற்றுக்கு அறிமுகமான தாலமி, பிளினி, பெரிப்பிளுஸ் ஆகிய கிரேக்க நாட்டு மாலுமிகள் சங்க காலத்திற்குப் பின்னர் தமிழகத்திற்கு வந்தனர். தமிழகத்தின் அரசியல் முறை சமுதாய வாழ்க்கை, வணிகப் பொருட்கள் ஆகியன பற்றிய குறிப்புக்களை அவர்களது பயணக் குறிப்புக்களில் காண முடிகின்றது. இவர்களை அடுத்து கி.பி. 7, 8-ஆம் நூற்றாண்டுகளில் சீன நாட்டி லிருந்து பெளத்த மதத் துறவிகளான பாஹியான், யுவான் சுவாங் ஆகியோர்களது குறிப்புக்களும் தமிழக நாகரிகத்தையும் பண்பாட்டையும் தெரிவிக்கும் வரலாற்றுச் சான்றுகளாக அமைந்து விளங்குகின்றன. இவர்களது வருகையைத் தொடர்ந்து கி.பி. 1272-இல் சீனாவிலிருந்து வந்த உலகப் பயணி மார்க்கோ போலோவும் கி.பி. 1344-இல் சேது நாட்டுக்கு வந்த உலகப் பயணி இபுனு பதுதாவின் பயணக் குறிப்புகளும் சேது நாட்டு வரலாற்றிற்கு பெரிதும் உதவி புரிபவனாக உள்ளன. இன்னொரு அணியினரான இத்தாலி நாட்டுப் பாதிரியார் அந்தோணியோ கிரிமிநாலிஸ் (1545) போர்ச்சுகல் நாட்டுப் பாதிரியாரான பிரான்சிஸ் சேவியர் (கி.பி. 155o