பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O நபிகள் நாயகம் வழியில் - 52) மற்றும் 17 - ஆம் நூற்றாண்டில் வருகை தந்த ஜான் - டி - பிரிட்டோ பாதிரியார் (கி.பி. 1685 - 93) மார்ட்டினஸ் பாதிரியார் (கி.பி. 1710 - 12) பயணக் குறிப்புகளும் நமது நாட்டின் வரலாற்று ஆவணங்களாக விளங்கி வருகின்றன. இன்னொரு அணியினரான இஸ்லாமிய பிரச்சாரர்களும் வணிகர்களும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து கி.பி. 11 - ஆம் நூற்றாண்டு முதல் சேதுநாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கால நீட்சியில் இவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், பயண வரைவுகள் ஆகியவை நமக்குக் கிடைப்பனவாக இல்லை. வர லாற்றிற்குத் தெரிந்த வரையில் இந்த இஸ்லாமியச் சமயப் பிரச்சாரகர்களில் முன்னோடியான சுல்தான் செய்யது இபுராஹிம் அவர்கள் சேதுநாட்டிற்கு வருகை தந்த முதலாவது இஸ்லாமியப் பிரச்சாரகர் ஆவார். அன்னாரைப் பற்றிய இஸ்லாமிய வரலாற்று. நூல்களும், தமிழ் இலக்கியங்களும் வழக்கில் இருந்து வருகின்றன. ஆனால் இவைகளில் வரலாற்று ஆய்வாளர்களும் மற்றும் இஸ்லாமியர்களும் இதுவரை எவ்வித அக்கரையும் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை. இந்தக் குறைபாட்டினை நிறைவு செய்வதன் வழியாக இந்தத் தொகுப்புரையை வரையத் தொடங்கியுள்ளேன். இது சம்பந்தமான இஸ்லாமிய நூல்களில் காணப்படும் காலவரையரை, அப்பொழுது பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த பாண்டியர்களது பெயர்கள், மற்றும் வரலாற்று நிகழ்ச்சிகளுக் கிடையில் பெருத்த வேறுபாடும் பொருத்தமற்ற செய்திகளும் காணப்படுகின்றன. என்றாலும் வரலாற்று ஆய்வாளன் என்ற முறையில் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களையும், பாண்டியர் வரலாற்றையும் கல்வெட்டுக்களையும் ஆதாரமாகக் கொண்டு இந்தத் தொகுப்புரையினைத் தொடங்குகின்றேன். Ł *్మ*