பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





இயல் - 2

நபிகள் நாயகம் பேரனார்


இந்தப் பூவுலகம் பரந்து விரிந்த பெரும் நீர்ப்பரப்பினால் சூழப்பட்டுள்ளது என்பதையும். இந்த நிலப்பரப்பு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா என ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருப் பதையும் யாவரும் அறிவோம். இதில் அமெரிக்கக் கண்டமும், ஆஸ்திரேலியாக் கண்டமும் தனித்தனியான பெரும் தீவுகளாக அமைந்துள்ளன. எஞ்சிய மூன்று கண்டங்கள் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்பனவற்றை இணைக்கும் தீபகற்பமாக அரபுத் தாயகம் அமைந்துள்ளது. கிழக்கே பாரசீக வளைகுடாவும் மேற்கே செங்கடலும், தெற்கே அரபிக் கடலும் இந்த தீபகற்பத்தைச் சூழ்ந்துள்ளன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பரப்பு வடக்கே உள்ள பாலஸ்தீன நாட்டுடன் இன்றைய ஈராக், சிரியா, ஜோர்டான், ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற சிறிய நாடுகளைக் கொண்ட பெரும் நிலப்பரப்பாக இருந்தது. மூன்று கண்டங்களுக்கும் இணைப்புப் பகுதியாகவும், மையப் பகுதியாகவும் இயற்கை யிலேயே அரபுத் தாயகம் அமைந்து இருப்பதால் மனிதனது முதலா வது தோற்றத்தலமாகவும் இது கருதப்படுகிறது. கிறிஸ்தவ இஸ்லாமிய நூல்களின்படி முதல் மனிதன் ஆதமும் அவரது துணைவி ஹவ்வாவும் அங்கு வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.