பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நபிகள் நாயகம் வழியில் பாலஸ்தீனப் பகுதி என்று அழைக்கப்பட்ட பெரும் நிலப்பரப் பில் யூதர்கள் என்ற இனத்தவர் வாழ்ந்து வந்தனர். தம்மைப் படைத்த எல்லாம் வல்ல இறைவனை மறந்து இன்பக் கேளிக்கைகளிலும், குடி, கொலை போன்ற பாவச் செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். இத்தகைய இழிந்த மக்களை அச்சமூட்டி நல்வழிப் படுத்துவதற்காக பல முறை தூதர்களை இறைவன் அங்கு அனுப்பி வைத்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்க நூஹ" (அலைஹிவஸ்ஸல்லம்) மூஸா (அலைஹிவஸ்ஸல்லம்), தாவூது (அலைஹி வஸ்ஸல்லம்), இப்ராகிம் (அலைஹி வஸ்ஸல்லம்) சுலைமான் (அலைஹி வஸ்ஸல்லம்) போன்ற இறைத் தூதர்களும் இறைவன் கட்டளையை இதயத்தில் தாங்கியவர்களாக ஏக இறைவனை வழிபட்டு உய்வதற்கான வழிகளை அந்த மக்களுக்கு உபதேசித்து வந்தார்கள். அதன்பிறகு 3500 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்ராகிம் என்ற இடைக்குடி ஏந்தலை, அந்த மக்கள் உய்வு பெறுவதற்காக தமது பிரதிநிதியாக இறைவன் அனுப்பி வைத்தான். ஏகதெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இந்த இளவல் முந்தைய அரபுத் தாயகத்தில் தமது மனைவி சாராவுடனும் சிறு குழந்தை இஸ்மாயிலுடனும் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். சிலை வணக்கத்தை ஒழித்து மூடப் பழக்கங்களிலிருந்து விடுபட்டு, நல்ல இறையடியார்களாக வாழும்படி மக்களிடம் போதித்து வந்தார். நபி நூஹ் (அலைஹறிவஸ்எலல்லம்) அவர்களின் бол06»лдол இஸ்லாமிய வரலாறுகளில் இருந்தும் இறை மறையிலிருந்தும் நமக்குக் கிடைக்கும் இறைத் தூதரின் வரலாறு நபி நூஹ் (அலைஹிவஸ்ஸல்லம்) பற்றியதாகும். இவரது பிறந்தகம் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லையென்றாலும், பல நூற்றாண்டு களுக்கு முன்னர் ஏக தெய்வக் கொள்கையை தம் இதயத்தில் ஏந்தியவர்களாக அரபுத்தாயகத்தில் வாழ்ந்து வந்தார் எனத் தெரிய வருகிறது.