பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 13 குடி, களவு, காமம் போன்ற பாவச் செயல்களில் அடிமைப் பட்டுக் கிடந்த அந்த அரபு மக்களிடையே ஆன்மீகத்தையும், அறிவார்ந்த நல்ல பண்புகளையும் பின்பற்றி நடக்குமாறு போதித்தார். இவரது 40-வது வயதில் இறைவன் இவரைத்தம் திருத்துதர்களில் ஒருவராக அங்கீகரித்தான் என்பதை இறைமறைத்திரு வசனத்தின் மூலம் அறிகிறோம். பொல்லாதவர்களின் இழிவுச்சொற்களையும் முரடர்களின் வன்முறைத்தாக்குதல்களையும் பொறுமையாய் ஏற்றவராகப் பல நூறு ஆண்டுகள், இறைவனது ஏகத்துவ நெறியை அந்தமக்களிடம் உபதேசித்து வந்தார். இவரது குடும்பத்தினர் கூட இவரது உபதேசங்களை ஏற்கவில்லை. இந்நிலையில் இவர், மிகவும் தளர்ந்து அயர்ந்து தன் நிலைமையை இறைவனிடம் எடுத்துக் கூறியதுடன், அந்தப் பாவிகளது சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்தால்தான் உலகில் புனிதம், புண்ணியம், தர்மம், பக்தி ஆகிய சொற்களுக்குப் பொருள் ஏற்படும் எனத் தெரிவித்தார். இறைவனும் இவரது 900 - ஆண்டுகாலத் தொண்டினையும் இவரின் வேண்டுதலையும் ஏற்று 'இன்னும் ஒரு மாதத்தில் இந்தச் சமூக அமைப்பு அழிந்து விடும் ஆதலால் நீ விரும்பும், உம்மைச் சார்ந்துள்ள விலங்குகள், பறவைகள், மற்ற உயிரினங்கள் ஆகியவைகளைக் காப்பதற்காக மிகப்பெரிய தோணி ஒன்றினை இப்பொழுதிருந்தே தயாரிக்கத் தொடங்கும்' என ஆணையிட்டான். இறைவனது ஆணைப்படி இறைத் தூதரான நபி நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு தோணியை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அந்த ஊர் மக்கள் அனைவரும் இவரது. செய்கையைக் கண்டு ஏளனம் செய்தார்கள். இந்தத் தோணி தரையில் எப்படி மிதக்கும் என்று கேலி செய்தார்கள். குறித்த ஒரு மாதத்தில் இரண்டு மூன்று தளங்களுடன் கூடிய தோணியை நூஹ்நபி அவர்கள் கட்டி முடித்துவிட்டார்கள். அத்துடன் தம்மைச் சார்ந்துள்ள விலங்குகள், பறவைகள், உயிரினங்கள் அனைத்தையும்