பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நபிகள் நாயகம் வழியில் அந்தத் தோணிக்குள் கொண்டுவந்து சேர்த்தார். சரியாக முப்பதாவது நாள் கிழக்குவானம் கறுத்துப் பெருமழை பெய்யத் தொடங்கியது. நபி நூஹ ைஅவர்கள், தமது தோணியில் கொண்டு வந்து சேர்த்த எல்லா உயிரினங்களும் பத்திரமாக அந்தத் தோணிக்குள் இருந்தன. மழை வெள்ளம் பெருக்கெடுத்து நீர் மட்டம் உயர்ந்தவுடன் அந்தத் தோணி நீரில் மிதந்தது. நபி நூஹ் அவர்களின் சொல்லைக் கேட்காத மக்கள் அனைவரும் அந்த வெள்ளப் பிரளயத்தில் மூழ்கி இறந்துவிட்டனர். ஒரு துல்ஹஜ் மாதத்துடன் முடிந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து பெய்த மழை நின்று, சூரியனின் வெளிச்சம் உலகெங்கும் தெரிந்தது. மழை வெள்ளம் முற்றாக வடிந்து தோணி பூமியில் தரைதட்டி நின்றது நபி நூஹ் அவர்கள் அந்தத் தோணியிலிருந்து இறங்கி வெளியே வந்து பார்த்தபொழுது பழமையின் சின்னங்கள் எதுவும் இல்லை. தம் தோணியிலிருந்த விலங்குகளையும் பறவை களையும் மற்ற உயிரினங்களையும் அந்தப் புதிய பூமியில் வாழும் படி செய்தார். இந்தச் வெள்ளப் பிரவாகத்திற்குப்பின் 40 ஆண்டுகள் வரை நூஹ்நபி அவர்கள் வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகிறது. இறைவனது கட்டளையை ஏற்று ஏகத்துவத்தைப்பரப்பிய முதலாவது திருத்துதர் நூஹ் நபி (அலைஹி வஸ்ஸல்லம்) ஆவார்கள். இன்னொரு வரலாற்றின்படி இவர் ஆதம் (அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் இந்த பூமிக்கு வந்து 1642 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்தவர் எனத் தெரிய வருகிறது.