பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 15 நபி மூஸா அலைஹறிவஸ்ஸல்லம் வரலாறு நபிமார்களில் முக்கியமானவர். பனு இஸ் ராயில் கூட்டத்தை வழிநடத்த அவர்களிடையே தோன்றியவர். இவருக்கு வல்ல இறைவன் தெளராத் எனும் வேதம் இறக்கினான். தெளராத் வேதம் அருளப்பட்டவர். இவருடைய தந்தையின் பெயர் இம்ரான். தாயாரின் பெயர் யூகானிது என்பதாகும். இவர் பிறந்த அன்று எகிப்து மன்னன் ஃபிர் அவ்ன் என்பவன் ஒரு கனவு கண்டான். அதை அரசாங்க ஜோதிடர்களிடம் கூறிக் கனவுப் பலன் கூறுமாறு கேட்டான். அதற்கு அவர்கள் பிர்அவ்ன் ஆட்சிக்கு முடிவுகட்டும் ஆண் குழந்தையொன்று பிறந்திருப்பதாகக் கூறினர். இதைக்கேட்டு வெகுண்ட மன்னன் பிர்அவ்ன் அன்று பிறந்த எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று விடுமாறு தம்படை வீரர்களுக்கு ஆணையிட்டான். இதையறிந்த மூஸாவின் பெற்றோர் மனம் கலங்கி, பயந்து தம் குழந்தையை எப்படியாவது' காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தக் குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து பெட்டியோடு நைல் நதியில் விட்டு விட்டனர். அந்தப் பெட்டி அரண்மணைத் தோட்டத்தருகே ஒதுங்கியது. பிர்அவ்ன் குடும்பத்தினரே அந்தப் பெட்டியைக் கண் டெடுத்து திறந்து பார்க்கும் பொழுது, உள்ளே அழகான ஒரு ஆண் குழந்தை இருப்பதைக் கண்டார்கள் இந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய பிர்அவ்னின் மனைவி ஆஸியா என்பவள் தாமே அந்தக் குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க விரும்பினாள். மன்னன் பிர்அவ்ன் அந்தக் குழந்தையைக் கொல்லத்திட்டமிட்ட போது குழந்தை பெரிதாக இருப்பதால் இது, மன்னர் கனவு காண்பதற்கு முன்னதாகவே பிறந்திருக்கும் எனவே இக்குழந்தை