பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயன் 17 ஏர்வாடி தர்ஹா ஏர்வாடி என்ற சிற்றுார் இராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கீழக்கரைக்குத் தெற்கே 5 கல் தொலைவில் அமைந்துள்ளது. இராமேஸ்வரம் தூத்துக்குடி செல்லும் நெடுஞ் சாலையில் இந்த ஊர் அமைந்திருந்தாலும் புனித செய்யது இபுறாகீம் சகீது (வலி) அவர்களது நினைவிடத்தைச் சுட்டும் எர்வாடி தர்ஹா இந்த நெடுஞ்சாலையிலிருந்து கிழக்கே ஒரு கல் தொலைவில் உள்ளது. ஏர்வாடி என்ற இந்த ஊரின் பெயருக்கேற்ற பொருள் அறியத்தக்கதாக இல்லை. ஏறு பதி என்ற சிறப்பான தலம் என்ற பொருளைத் தரும் சொல்தான் பிற்க்காலத்தில் ஏர்வாடி என திரிபு பெற்றிருக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் நான்குனேரி வட்டத்தில் ஏர்வாடி என்ற பிறிதொரு ஊர் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது இந்த ஊர் கல்வெட்டில் புலியூர் அஞ்சு வண்ணம் என காணப்படுகிறது என்றாலும் இராமநாதபுரம் மாவட்டத்து ஏர்வாடிக்குள்ள வரலாற்று சிறப்பும் பெருமையும் அந்த ஊருக்கு இல்லை. புனித சுல்தான் செய்யது இபுறாகிம் சகீது அவர்கள் கி.பி. 1198ல் விக்கிரம பாண்டியனுடன் போர் புரிந்து புகழுடம்பு பெற்ற தலம் இந்த ஏர்வாடி தர்ஹா ஆகும். தர்ஹா என்ற அரபிச் சொல்லுக்கு மகான்களின் அடக்கவிடம் என்பது பொருள். பாண்டிய நாட்டிற்கு