பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15Յ நபிகள் நாயகம் வழியில் புதிய சமயமான இஸ்லாத்தை பரப்புவதற்கென்றே கி.பி. 1187ல் காயல்பட்டினம் என்ற துறைமுகத்துக்கு வந்த சேர்ந்தவர்கள் இந்த மஹான். இவர் அரபு நாட்டில் இஸ்லாம் என்ற ஏக தெய்வ வழிபாட்டினைப் புகுத்திய முகம்மது நபி அவர்களது மகள் வழியில் 18 ஆவது தலைமுறையில் வந்தவர். இந்தப் பெருமகனது பெருமை மிக்க சமயப் பணியினையும், உயிர்த்தியாகத்தையும் அறிந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னர் குமார முத்து விஜய இரகுநாத சேதுபதி அவர்கள் இந்தப் புனித இடத்தில் பராமரிப்பிற்கென கி.பி. 1742ல் மாயாகுளம் என்ற மூவாயிரம் குறுக்கம் விளை நிலங்களைக்கொண்ட ஊரினை சர்வ மான்யமாக வழங்கினார். அப்பொழுது இந்த மகானது நினைவிடம் எப்படி இருந்தது என்பது அறியத்தக்கதாக இல்லை. ஆனால் கி.பி. 1772ல் சேது நாட்டின் மீது படையெடுத்து வந்து சேதுபதி மன்னரை சிறைக்கைதியாக பிடித்துச் சென்ற ஆர்க்காட்டு நவாப் முகம்மது அலி சாஹிபின் உத்தரவின் பேரில் அவரது தளபதி இப்திகார்கான் இந்த மஹானது நினைவிடத்தை தற்பொழுது உள்ள அமைப்பில் கட்டுமானம் செய்தார் எனத் தெரிய வருகிறது. இந்தப் பணி கி.பி. 1772க்கும் 1775க்கும் இடைப்பட்ட காலத்தில் நிறைவேற்றப் பட்டிருத்தல் வேண்டும். இதனை ஏர்வாடி தர்ஹாவின் புனித மஹானது நினைவிடத்திற்கு நுழையும் நிலைப்படியிலுள்ள பாரசீக மொழிக் கல்வெட்டு புலப்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து இந்தக் கட்டுமானத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இதுவரை செய்யப் படவில்லை. இந்த தர்ஹா மற்றும் சம்பந்தப்பட்ட ஒளிப் படங்கள் அடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. o