பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சில குறிப்புகள் 1) சுல்தான் செய்யது இபுராஹிம் பாண்டிய நாடு வந்த பொழுது பெளத்திர மாணிக்கப் பட்டினத்தில் ஆட்சி செய்த விக்கிரம பாண்டியனை நினைவூட்டும் இரு ஊர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன். முதுகளத்துருக்கு அண்மையில் விக்கிரமபாண்டியபுரம் என்ற ஊரும் இராமநாதபுரத்திற்கு தென் கிழக்கே தெற்குத் தரவை ஊராட்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ள விக்கிரம பாண்டியன் வலசை என்பதும் அந்த ஊர்களாகும். 2) இராமநாதபுரம் சீமையின் தன்னரசு மன்னராக விளங்கிய முத்துராமலிங்க சேதுபதியை 3.6.1772 இல் நடைபெற்ற போரில் தோல்வியுறச் செய்து விட்டு சேதுநாட்டை 8 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தார் ஆற்காட்டு நவாப் முகமதலி, அவரது தளபதியான கான் என்பவர் ஏர்வாடிக்கு வருகை தந்து சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்கவிடத்திற்கு ஜியாரத் செய்தார். அப்பொழுது அவர் சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்கவிடத்தின் மேற்குப் பகுதிச் சுவற்றில் ஒரு கல்வெட்டினையும் பதித்துள்ளார். அதில்