பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 17 பிறகு நபி மூஸா சிரியா சென்றார். அங்கே மக்களை நல்வழிப்படுத்தும் பணிகளை மேற்க்கொண்டார். ஆனால் அவர்கள் ஏளனம் பேசினர். இறைவனின் சினத்திற்கு ஆளாகினர். இஸ்ர வேலர்களை மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்டவே, இறைவன் அவர்களை மன்னித்தான். பிறகு துர்சினாய் மலை சென்றார். இறைவனுடன் உரையாடும் பேறுபெற்றார். இறைவனால் நபிமூசா அவர்களுக்குத் தெளராத்வேதம் அருளப்பட்டது. 150 வயது வரை நபிமூஸா வாழ்ந்து வந்தார் என அறியப்படுகிறது. சாமிரி என்பவனின் துர்போதனையால் இஸ்ர வேலர்கள் காளைமாட்டை உருவமாகச் செய்து வணங்கினர். நபிமூஸா அவர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்ததுடன், அந்த உருவச் சிலையை கடலில் துக்கி எறிந்தார். இஸ்ர வேலர்களுக்கென உருவமில்லா தனி ஆலயம் ஒன்றினை அமைத்தார். ஒவ்வொரு சன்ரிக்கிழமையும் இறை வணக்கம் செய்யப் பணித்தார். இறைவனுடன் நேருக்கு நேர் நின்று உரையாடும் வாய்ப்பை இவர் பெற்றதனால் நபிமூஸா அவர்கள், கலீமுல்லாஹ் எனப் போற்றப்பட்டார். இறைவனது கட்டளைப்படி இந்த இறைத்துதர், அந்தப் பாலை வெளியில் இறைவனது வழிபாட்டிற்காகக் களி மண்ணிலாலான முதலாவது ஆலயம் ஒன்றை இறைவனுக்காக அமைத்தார். அத்துடன் மனித சஞ்சாரமற்ற அந்தப் பெரு வெளியில் உள்ள ஆலயத்திற்கு வந்து மக்கள் வழிபடும்படி இறைவனது கட்டளைப்படி உறக்கக் கூவி அழைத்தார். பக்கா என முன்னர் வழங்கப்பட்ட ஊர்தான் இன்றைய பெருநகரான மக்கா என்ற புனிதத்தலமாகும். தொடர்ந்து அரபுத் தாயகத்தின் ஏனைய பகுதிகளைப் போல இங்கு வாழ்ந்த அரபு மக்கள் அறியாமையிலும் மூடப் பழக்க வழக்கங்களிலும் மூழ்கியவர்களாக வாழ்ந்து வந்தனர். இவர் களிடையே எந்த விதமான சமூக அமைப்பும் இருக்கவில்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற முதுமொழிக்கு ஏற்ப இந்த மக்களில் மிருக பலமும் ஆள்சேர்க்கையும் உடையவர்களே பிற மக்களை ஆட்டிப்படைத்து வந்தனர். இவர்களுக்குத் தலைவராக விளங்குபவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். ந. - 2