பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நபிகள் நாயகம் வழியில் இவர்களது பொழுதுபோக்கு எல்லாம் மற்ற கூட்டத்தாரோடு வலுச் சண்டைக்குப் போவதும் வீணாக இரத்தம் சிந்துவதிலும் குடியிலும் கூத்திலுமாகக் கழிந்து வந்தது. குலப் பெருமை, கோத்திரத் தின் உயர்வு என்ற வீணான கற்பனைகளிலும், வாக்கு வாதங்களிலும் வாள்போர்களும் நடத்தி வந்தனர். இவர்களுக்கு இறை நம்பிக்கை, மனித குலம் உயிர்த்தெழுதல் என்பதெல்லாம் அறியாதனதாகும். மேலே சொல்லப்பட்ட கஃபா என்ற புனிதத் தலத்தில் 365 கற்களை நட்டு வைத்து நாளுக்கு ஒன்றாக ஆண்டு முழுவதும் தங்களது கடவுளாக வழிபட்டு வந்தனர். இந்த ஆலயத்தைச் சுற்றி ஆடை அணியாமல் விழாக் காலங்களில் பிரதட் சனம் செய்வதையும் புனித வழக்கமாகக் கொண்டிருந்தனர். விலங்கு வாழ்க்கையைப் போன்று காலம் கழித்து வந்த இந்த மக்களைத் திருத்துவது யார்? அறியாமையும் மெளட்டீகமும் நிறைந்த அறிவிலிகளான இந்த மக்களுக்கு மனத்தில் அறிவினைப் புகட்டுவது யார்? தங்களைப் படைத்த பரம்பொருளாகிய ஏக இறைவனை அறிந்து அறிவுப்பூர்வமாக வழிபாடு நடத்துவது எப்படி? இந்த வினாக்களுக்கு விடை தேடும் வேளையும் வந்தது. நாயகப் பேரொளி இன்றைக்கு ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நகரின் பெரும் குடிகளான வணிகர்கள் (குறைவியரது) குலத்தில் கி.பி. 570 - இல் முகம்மது என்ற குழந்தையை இறைவன் தோற்றுவித்தான். அன்றைய அரபுத் தாயகம் அறியாமையிலும். மூடப் பழக்க வழக்கங்களிலும் கொடிய பாவச் செயல்களிலும் மூழ்கி இருந்தது. அந்த அறியாமைக் காலத்தை அரபு நாட்டு வரலாற்று ஆசிரியர்கள். ஐயாமுல், ஜாகிலீன் அல்லது இருண்ட காலம் என வர்ணித்துள்ளனர். இந்த மக்கள் தங்களது இயல்பான பாவச் செயல்களிலிருந்து மீட்சி பெற்று இறை நம்பிக்கை யாளர்களாக மாற்றும் முயற்சியில் தமது கடைசி காலம் வரை இந்த