பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 19 இளைஞர் முகம்மது பாடுபட்டார். இறைவனது இறுதித் துது வராகவும் வழிதவறிய மக்களை நேர் வழியில் நடப்பித்த மிகச் சிறந்த வழிகாட்டியாகவும். சீர்திருத்த வாதியாகவும், இறைவனிடம் இருந்து அப்போதைக்கு அப்போதை பெற்ற வேத வெளிப் பாடுகளை உலகிற்கு உணர்த்திய உத்தமராகவும் இந்த முகமது நபி (ஸல்லலாகு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் போற்றப்பட்டார்கள், இன்றும் போற்றப்படுகிறார்கள். இவரது ஒரே மகள் பாத்திமாவின் வழியில் 18-வது தலை முறையில் பிறந்தவர் தான் செய்யது அஹமது என்ற சன்மார்க்கத் தொண்டராவார். இவர் இறுதித் தூதர். முகம்மது நபி அவர்களது போதனையையும் செயல் முறைகளையும் சிறப்பாகக் கடைப்பிடித்து ஒழுகி வந்தார். இவரது தந்தை மதினா நகரைச் சுற்றிய பகுதிக்குக் குறுநில மன்னராக இருந்து வந்ததால் அவரது நிர்வாக முறைகளிலும், அவருக்கு உதவி வந்தார். இவரது 25-வது வயதில் மதினா நகர் பெருங்குடியைச் சேர்ந்த சயிதாபாத்திமா என்ற பெண்மணியை மணந்திருந்தார். இவரது தந்தையார் செய்யது அப்துல் கபூர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இயற்கை எய்தியதால், இளவல் செய்யது அஹமது பொறுப்பும் பொது நலப் பணிகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஹிஜிரி 528ல் மதினா சுல்தானாக செய்யது அஹமது அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் மக்களின் தேவைகளையும் விருப்பத்தையும் நிறைவேற்றி வைக்கும் பணியில் தமது வாழ்நாளைக் கழித்து வந்தார். சுல்த்தான் இபுராஹிம் பிறப்பு இவருக்கு ஹிஜ்ரி 530 ரமலான் மாதம் 3 - ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. மாநிலம் தனக்கோர் மணி விளக்காகப் பிறந்த மாபெரும் நபியின் பேரரான இந்தக் குழந்தைக்குப் பெற்றோர்கள் செய்யது இப்ராகிம் என்று அழகிய பெயரினைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.