பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நபிகள் நாயகம் வழியில் (ஸல்லல்லாகு) அவர்களது வாழ்க்கையும் தொண்டும் எப்பொழுதும் அவரது சிந்தனையைச் சூழ்ந்து நின்றன. அறியாமையிலும் அநாகரிகத்திலும் ஆழ்ந்திருந்த மக்கமாநகர் குறைஷிகளை இறைவனது கட்டளைப்படி திருத்திச் சிலை வணக் கத்தையும் குடி கொலை முதலிய பாவங்களினின்றும் காத்துக் கொள்ளுமாறு அறிவுரையைப் புகன்று வந்த அண்ணல் முகமது நபி (ஸல்லல்லாகு அலைகிவசல்லம்) அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள். இடர்ப்பாடுகள், கொடுமைகள் ஆகியவை அனைத்தும் இளைஞர் செய்யது இபுராஹிம் அவர்களது மனத்திரையில் உறுதி யாக பதிந்து நின்றன. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கா. தாயிப் ஆகிய ஊர் மக்களிடமிருந்து எதிர்கொண்ட சவால்கள், பிரச்சனைகள் ஆகியவைகளை அண்ணல் அவர்கள் மிகுந்த பொறுமையுடன் தீர்த்து வைத்த செய்திகளையும் அவர்கள் அறிந் தார்கள். மக்களிடம் தாமும் இத்தகைய தொண்டுகளில் ஈடுபட்டால் தமக்கும். இத்தகைய அக்கிரமங்களும் அடாத செயல்களும் எதிர்ப்பட்டால் அவைகளை எங்ங்னம் சமாளிப்பது? சமய சமுதாயத் தொண்டுகள் செய்ததில் நாயகம் (ஸல்லல்லாகு) அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் இளைஞர் செய்யது இபுராஹிம் அவர்களது மனத் திரையில் மாறி மாறி தோன்றிக் கொண்டே இருந்தன. இறைவன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையினாலும் இறைத்துதர் முகமது நபி ஸல்லல்லாகு பெயரில் கொண்ட அத்தியந்த அன்பினாலும் அவர்களது உள்ளம் பண்பட்டு பொது வாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார் என்றாலும் நாயகம் அவர்களது வாழ்நாளில் ஏற்பட்ட சில மறக்க முடியாத நிகழ்ச்சிகள் அவரது சிந்தனையில் சுழன்று கொண்டே இருந்தன. o