பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 21 15) மேற்படியாரது மகன் அப்துல்கபூர் 16) மேற்படியாரது மகன் அஹ்மது 17) மேற்படியாரது மகன் இப்ராகிம் இந்தப் பரம்பரை பற்றிய விபரங்களைக் காயல்பட்டிணம் ஆலிம் செய்கு அப்துல் காதில் காதிரி என்பவர் அறிவித்துள்ளார். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்த இந்தக் குழந்தை விரைவிலேயே மாணவப் பருவத்தை எய்தியது. சுல்தான் செய்யது அஹமது தனது மைந்தனுக்குச் சிறந்த மார்க்கக் கல்வியைப் புகட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். செய்யது இப்ராகிம் தனது உஸ்தாதிடம் இறைவேதமாகிய குர் ஆன் செரிபையும். இறுதித் தூதரது போதனைகளான ஹதீஸ்ஸையும் நன்கு க்ற்றுத் தேர்ந்ததுடன் இஸ்லாமியரது வாழ்க்கை நடைமுறை. நோக்கு வழிகாட்டுதல். பற்றிய அனைத்து இலக்கியங்களையும் சிறப்பாக ஓதி உணர்ந்தார். ஒய்வு நேரங்களில் தமது சிந்தனையை இத்தகைய இஸ்லாமிய இலக்கியக் கருவூலங்களில் ஆழப்பதித்து இறைவனது உயர்ந்த நோக்கமாகிய வாழ்க்கையின் இலக்குகளைப் பற்றிச் சிந்தனை செய்து வந்தார். இவ்விதம் மாணவப் பருவத்தில் கற்று உணர வேண்டி யவைகளை அறிந்து தெளிந்ததுடன் அவைகளின் வழிநின்று மக்களுக்குச் சேவை செய்தும், அவர்களது இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் களைந்து ஒழிக்கும் சிறந்த தொண்டராகவும் விளங்கி வந்தார். தனது தந்தையின் பெரு விருப்பமாகிய மதினப் பகுதியின் சுல்தானாகி ஆட்சி நடத்துவதை விட இஸ்லாமிய மக்களுக்கு என்றென்றும் உதவும் கரங்களாக அமைந்து சாதாரண தொண்டராகவே வாழ விரும்பி வந்தார். அன்றாட வாழ்க்கையிலும் வழிபாடு களிலும் மனத்தைச் செலுத்தி வந்த இளவல் செய்யது இபுராகிமுக்கு அவரது பாட்டனார் அண்ணல் முகம்மது நபி