பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நபிகள் நாயகம் வழியில் இவ்விதம் நாயகம் அவர்களை ஏச்சிலும், பேச்சிலும் இழிவு படுத்தியதுடன் அவரின் நடமாட்டத்தையும் தடுத்து நிறுத்துவதற்கு முயன்றனர். நாயகம் அவர்கள் அந்த நகர மக்களுக்கு அப்படி என்ன தீங்கு செய்தார்கள். எல்லாம் வல்ல இறைவனை நாள்தோறும் வணங்க வேண்டும் என்றும் அந்த இறைவனுக்கு உருவம் எதுவும் இல்லை என்றும் பிரச்சாரம் செய்தார்கள். மேலும் கஃபா ஆலயத்தில் அப்பொழுது 360 கற்சிலைகள் வைக்கப்பட்டு 360 நாட்களுக்கு அதைவழிபாடு செய்ததையும் கண்டித்து வந்தார்கள். அத்துடன் குடியிலும், விபசாரத் திலும் மூழ்கி இருந்தவர்களை அவர்களது பாவங்களில் இருந்து விடுபட்டு இறைவனிடம் நல்வழி காட்டுமாறு பாவ மன்னிப்புக்கோர வேண்டும் எனப் போதித்தார்கள். மனிதர்களுக்குள் வேற்றுமை இல்லை என்றும் திக்கற்ற ஏழைகளான ஆண்களையும், பெண்களை யும் அடிமைச் சந்தைகளில் அடிமைகளாக விற்றுப் பொருள் சேர்ப்பதையும் கண்டித்தார்கள். இவை எல்லாம் அந்த அறிவிலி களுக்கு ஒவ்வாதவைகளாகத் தோன்றின. தலைமுறை தலைமுறையாக அவர்கள் போற்றி வந்த பழக்கவழக்கங்களையும் சமூக நீதிகளையும் களைந்தெறியச் சொல்வதற்கு முஹம்மது நபிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று வினவியதுடன் அவர்களுக்கு இறை உணர்வு ஏற்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பதையும் அவர்கள் ஏற்க மறுத்தனர். நபிகள் நாயகம் அவர்கள் மக்கமா நகரிலும் அதன் சுற்றுப் பகுதியிலும் தங்களது ஏக தெய்வக் கொள்கையையைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின. என்றாலும் அவரது அணியில் மிகச் சிலரே வந்து சேர்ந்தனர். இதனால் எதிரிகளின் எதிர்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது. நாயகம் அவர்களின் எதிரிகள் அதே குறைஷியர் குலத்தவராக இருப்பதால் கஃபா ஆலயத்தின் பொறுப்பாளராக அவரது பெரிய தந்தை இருந்து வந்ததாலும்