பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நபிகள் நாயகம் வழியில் நகரிலிருந்து வடக்கே 30 கல் தொலைவில் அமைந்துள்ள பசுமை யான நகரம். ஷாம் (சிரியா) நாட்டிற்குப் பொதிகளைச் சுமந்து செல்லும் ஒட்டகச் சாத்துகள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறும் இடமாகவும் விளங்கியதால் அந்த ஊர் சிறப்புற்று விளங்கியது. ஒரு குறிப்பிட்ட வீதி வழியாக நாள்தோறும் நாயகம் அவர்கள் செல்லும் போது ஒரு வீட்டின் மாடியில் இருந்து அவர் மேல் குப்பை கூளங்கள் கொட்டப்பட்டு வந்தன. மாடியை ஏறிட்டுப் பார்த்த பொழுது அங்கே ஒரு யூதப் பெண் கையில் கூடையுடன் நபியை வெறுப்புடன் நோக்குவது தெரிந்தது. அந்த அம்மணியைப் பார்த்த நாயகம் புன் சிரிப்புச் செய்துவிட்டு தனது தலையிலும் தோள் பட்டையிலும் விழுந்த குப்பைக் கூளங்களை உதறிவிட்டுச் சென்றார்கள். இது ஒருநாள், இருநாள் நிகழ்ச்சி மட்டுமல்ல, வழக்கமாகப் பெருமானார் அவர்கள் அந்த வீட்டின் வழியே செல்லும் பொழுது எல்லாம் அவர்களுக்கு நாள்தோறும் கிடைத்த பரிசாக இருந்து வந்தது. ஒரு நாள் அந்த வீட்டினைக் கடந்து நாயகம் செல்லும் பொழுது வழக்கமாக அவர் மீது கொட்டப்படும் குப்பை விழவில்லை. மறுநாளும் வீட்டைக் கடக்கும் போது குப்பை விழவில்லை. இதனால் ஆச்சரியமுற்ற பெருமானார் அவர்கள் அந்த அம்மையார் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள். அந்தக் கூடத்துள் படுத்து இருந்த அம்மையார் நபியைப் பார்த்து எழுந்து அமர்ந்தார்கள். அம்மணி உங்கள் உடம்புக்கு என்ன ஆயிற்று உடல் நலமில்லையா என அன்புடன் வினவியபொழுது அந்த அம்மையாருக்கு அவர்கள் கேள்வி வியப்பைத் தந்தது. சில நொடிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்த அவர்கள் நபியைப் பார்த்து ஐயா எனக்கு உடல் நலம் இல்லைதான் என்றாலும் நாள்தோறும் உங்கள் மீது குப்பைகளைக் கொட்டிக் குரோதம் காட்டிய என்னிடம் உடல் நலம் விசாரிக்க வந்திருக்கிறீர்கள். நான், இவ்வளவு அன்பு நிறைந்த தங்களுக்கு எவ்வளவு பெரிய தீங்கினைச் செய்து விட்டேன் என்றார். நாயகம், எல்லாம் இறைவன் நாட்டம். இப்பொழுது