பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 2了 அடுத்து நாயகம் அவர்கள் தனது வழக்கமான தியானத்தின் பொழுது வானவர் தலைவர் ஜிபுரிலைச் சந்தித்து அவர் வாய்மொழி வழியாக மனிதகுலம் உய்வதற்கு இறைவனது இறுதித் தூதராக இறைவனால் அவர் தேர்வு செய்யப்பட்டதைத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இறைவனது வேத வசனங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லியுள்ளதால் அவர்கள் அடைந்த ஆற்றொணாத் துயரமும் அவமானமும் நிறைந்த நாட்களைக் கழித்தது ஆகியவை களையெல்லாம் சுல்த்தான் செய்யது இபுராகிமின் மனத் திரையில் பளிச்சிட்டு மறைந்து கொண்டிருந்தன. மக்கா நகரில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஏக தெய்வக் கொள்கை யினை மக்களிடம் பிரச்சாரம் செய்து தலைமுறை தலைமுறையாக அரபிகள் பற்றி ஒழுகிய பழக்க வழக்கங்களையும் அடிப்படைக் கருத்துக்களையும், மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், ஏக இறைவனது திருத்துதர் என்ற முறையில் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அவர்கள் அனைவரும் கேளாக் காதினராக இருந்தனர். மேலும் அந்தப் பாமர மக்களும் பல தெய்வ வழிபாடுகளையும், பரம்பரை பரம்பரையாகப் பேணிவந்த ஆண், பெண் அடிமைத் தனத்தையும், இரவு பகல் என்று எண்ணாமல் பயணித்துக் கழித்த குடிப் பழக்கத்தினையும், விபச்சாரத்தையும் குலம் கோத்திரப் பெருமைகளை நிறைநிறுத்துவதற்காக அடிக்கடி சிந்திய இரத்தக் களரியினையும் தவிர்க்க வேண்டும் என நபிகள் நாயகம் எடுத் தோதிய அறிவுரைகள் அவர்களுக்கு மிகுந்த வெறுப்பையும் குரோதத்தையும், வளர்த்து வந்தன. நாயகம் அவர்களது பெரிய தந்தை அபுதாலிபு குரைசி இனத்தவரில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த பெரு மனிதராக இருந்து வந்ததால் அண்ணல் அவர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருந்தார்கள். என்றாலும் அவர்கள் உள்ளத்தில் கனன்று வந்த வெறுப்பும், விரோதமும் அண்ணல் அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற முடிவுக்குத் தள்ளியது. இதனால் அண்ணல் அவர்கள் மக்கா நகரைவிட்டு. தாயிப் நகரம் சென்று சிலகாலம் வசித்து வந்தார்கள். தாயிப் நகரம் மக்கா