பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதின நகரம் மதினத்துன்நபவிய்யா பள்ளிவாசன்) மதின நகரில் இறுதித் தூதர் முஹமது நபி ஸல்லல்லாகு அவர்கள் நிர்மாணித்த வரலாற்றுப் புகழ்வாய்ந்த பள்ளிவாசல் இது. இங்கு அந்த மனிதப் புனிதரது பொன்னுடலைத் தாங்கியுள்ள மண்ணறையும் இந்தப் பள்ளிவாசலின் ஒரு பகுதியாக அமைந் துள்ளது. ஒரு நாள் பின்னிரவில் இரண்டாவது சாமத்திற்குப் பிறகு இளைஞர் சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் தஹஜத் என்ற தொழுகையை முடித்துவிட்டு இறைவனது திருநாமங்களைப் பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். இறைவன் மீது இருந்த அவர்களது சிந்தனை இறைத்துதர் நபிகள் நாயகம் அவர்களைப் பற்றியதாகப் பரிணமித்தது. 500 ஆண்டுகளுக்கு முன்னர் நபிகள் நாயகம் அவர்கள் மக்கா நகரில் ஆமீனா அப்துல்லா ஆகியோரின் மைந்தனாக பிறந்ததும். பிறப்பதற்கு முன்னமேயே தந்தையையும் பிறந்த பின்னர் தாயையும் இழந்த அந்தச் சிறுவனைப் பற்றிய அன்பும் அனுதாபமும் நிறைந்த சிந்தனைகள் அவரது பெரியதந்தை அபுதாலிப் அவர்களால் வளர்க்கப்பட்ட விதம் பின்னர் மக்கமா நகரின் குறைவிகளிடம் செல்வாக்கும். அபிமானமும் பெற்ற இளை ஞனாக வளர்ந்தது. அந்த மக்களால் நம்பிக்கைக்கு உரியவர் அல் அமீன் எனப் பெயரிட்டு வழங்கப்பட்டது. பின்னர் அந்நகரத்துச் செல்வச் சீமாட்டியாகிய கதிஜா பிராட்டியின் முகவராகப் பணி யாற்றியது. பின்னர் அவரையே தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றது போன்ற சிந்தனைகள் இளைஞர் சுல்த்தான் செய்யது இப்ராகிம் அவர்களது மனத் திரையில் அலை அலையாகத் தொடர்ந்து வந்தன.