பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅC) நபிகள் நாயகம் வழியில் அவர்களை நேரில் காணாத பொழுதிலும் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவை ஒவ்வொரு நாளும் கேள்விப்பட்டு நபி மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அறிவிலிகளின் செயலில் நாயகம் அவர்களுக்கு பற்கள் உடைந்தன எனக் கேள்விப்பட்டதும் தானும் தமது பற்களை உடைக்க முன் வந்தார். 'என்னே, அவர் நாயகம் மீது கொண்ட அன்பு. அந்த நல்ல மனிதர் ஒரு கையில் கல்லை வைத்துக் கொண்டு தனது வாயின் மேல்பகுதி பல்லை உடைக்கத் தொடங்கினார். இதைக் கண்ட ஒருவர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபொழுது அண்ணலுக்கு ஏற்பட்ட மகத்தான இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களைப் போன்றே பற்கள் இல்லாது வாழ்ந்தால் தான் எனக்கும் வாழ்க்கையில் நிம்மதி கூடும். முஹம்மது நபியின் இரண்டு பற்கள் உடைந்தன என கேள்விப்பட்டேன். நீங்கள் வாயின் மேல் வரிசையில் அனைத்தையும் அல்லவா உடைக்கிறீர்கள் எனக் கேட்டார். ஆம், நாயகத்தின் எந்தப் பல் உடைந்தது என எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தான் அனைத்துப் பல்லையும் உடைக்கிறேன்" என்றார். வந்தவர் அவரைத் தடுத்து நிறுத்தினார். மேலும் இதுபோல் செய்யாமல் தடுத்தார். இந்த வித்தியாசமான நிகழ்ச்சி அந்தப் பகுதியிலேயே நபிகள் நாயகம் அவர்களின் மீது உவைசு என்ற பெரியவர் கொண்டிருந்த ஆழமான அன்பினையும் வேற்றுச் சமயத்தினரான அந்தப் பெரியவர் நபியின் கொள்கைகளிலும் செயல்களிலும் கொண்டிருந்த உறுதியான பற்றையும் என்றும் அந்தப் பகுதி மக்களால் புதுமையான நிகழ்ச்சியாகப் பேசப்பட்டு வந்தது.