பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதினமாநகர், முற்பகல் நேரம் மதினமா நகரின் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் அவர்களும் அவர்களது தோழர்களும் அமர்ந்து இருந்தனர். பொதுவாகக் காலைக் கடன்களை முடித்த பிறகு நாயகம் அவர்களும், அவர்களது தோழர் களும் அங்கு அமர்ந்திருப்பது வழக்கம். மதினா நகரின் பிரச்சனை கள், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களை மதினா நகரில் தங்க வைக்க வேண்டிய பொறுப்பு, ஏற்கனவே மதினா நகரில் கணிசமான அளவு குடியிருந்து வரும் யூத இனத்தவர்களுக்கும். கிறிஸ்தவர்களும் அன்சாரிகளான இஸ்லாமியர்களுக்கும் ஏற்படும் பிணக்குகள், இஸ்லாத்தின் புதிய குடியரசான மதீனா நகரை அழிப்பதற்கு எதிரிகள் செய்து வரும் சூழ்ச்சிகள் அனைத்தையும் அந்த சபையிலேயே விவாதித்து முடிவு காண்பது வழக்கமாக இருந்தது. மேலும் நாயகம் அவர்களைச் சந்திப்பதற்காகவும், அவர்களது அறிவுரைகளையும் ஆசிகளையும் பெறுவதற்காகவும், அரபு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அன்பளிப்புக்களுடன் வந்து சந்திக்க விரும்புகிறவர்களும் புதிய சமயமாகிய இஸ்லாத்தைப் பற்றிய புதிய விவரங்களைத் தெளிவாக அறிவதற்கு விழைகின்ற யூத கிறிஸ்தவப் பெரியார்களும், அந்த சபைக்கு வந்து நாயகம் அவர்களை சந்தித்து உன்ரயாடும் வழக்கமும் இருந்து வந்தது. அன்றைய கூட்டத்தில் அண்மையில் நடந்த பத்ரு போர் பற்றிய பிரச்சனைகளைப் பேசி முடிவெடுப்பது ஒரு முக்கியமான பகுதியாக இருந்தது. மிகவும் முதிர்ந்த வயதில் உள்ள ஒரு அம்மையார் அப்பொழுது அங்கு வந்து நாயகம் அவர்களுக்கு சலாத்தைத் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்துள்ள காரணம் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட பொழுது அவர் சொன்னார். நாயகம்