பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நபிகள் நாயகம் வழியில் அவர்களே! இறைவனது இறுதித்துதரான தங்களை எனது வாழ்நாளில் சந்தித்து மகிழ வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்கான வாய்ப்பினை இன்றுதான் எனக்கு இறைவன் வழங்கியுள்ளான். இறை நம்பிக்கையாளர்களுக்கு நேர் வழிகாட்டி ஆசீர்வாதம் செய்வதுபோல எனக்கும் தங்கள், தங்களது ஆசீர்வாதத்தை வழங்கிட வேண்டும் என்று சொல்லியவர். தனது கையில் இருந்த ஒரு சிறிய துணி முடிச்சையும் நாயகம் அவர்களிடம் பணிந்து கொடுத்தார். இது என் தோட்டத்தில் விளைந்த திராட்சைப் பழங்கள் தங்களுக்காக அதை எடுத்து வந்தேன். 'மிக்க மகிழ்ச்சி தங்கள் அன்பிற்கு ஆண்டவன் இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்ற உதவிகளையும் செய்வானாகவும்' என்று சொல்லிய நாயகம் அவர்கள் அந்தப் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டார்கள். இப்பொழுது தங்களுக்கு மன திருப்பதி ஏற்பட்டிருக்கும் என்று சொல்லி தாங்கள் சென்று வரலாம் என்று விடையளித்தார்கள்: அந்த அம்மையாரும் மிகுந்த LDößT நிறைவுடன் அங்கிருந்து சென்றார். அங்கிருந்த தோழர்களில் ஒருவர் எழுந்து நின்று பணிவாக சொல்லத் தொடங்கினார் இறைவனது திருத்துதரே இன்று தங்களது வழக்கமான செயல்களுக்கு முரணாகத் தாங்கள் மட்டும் தங்களுக்கு அளித்த பழத்தைச் சாப்பிட்டீர்கள் எஞ்சியவற்றை வழக்கம்போல் எங்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுக்கவில்லையே ஏன்? என்று அறிந்து கொள்ளலாமா எனக் கேட்டார். தோழரே தாங்கள் சரியான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். எட்பொழுதாவது யாராவது எனக்கு அன்பளிப்பாகப் பொருட்கள் வழங்கினால் அவற்றைத் தங்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பது வழக்கம் என்றாலும். அந்த அம்மையார் கொடுத்த பழங்களை நான் வாயில்போட்டு மென்றபோது அவை மிகவும் புளிப்பாக இருந்தன. அவற்றைத் தங்களுக்குக் கொடுத்தால் நீங்களும் மென்றுவிட்டு முகத்தைச் சுளிப்பதுடன் அந்தப் பழங்கள் புளிப்பாக இருக்கின்றன என்று சொன்னால் அதனை அன்டோடு அளித்த அம்மையார் உள்ளத்திற்கு வருத்தமாக இருக்கும். ஆதலால் தான் அந்தப்