பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 33 பழங்களை உங்களுக்குக் கொடுக்கவில்லை. இதோ எஞ்சி இருப்பவற்றை நீங்களே சுவைத்துப் பாருங்கள் என்றார்கள். அன்போடு நீண்ட தூரம் நடந்து வந்து கொடுத்த அந்த அம்மையாரின் மனத்தை வருத்தமடையச் செய்யக் கூடாது என்ற நாயகம் அவர்களது நல்ல பண்பினை அவரது தோழர்கள் மிகவும் பாராட்டினார்கள். அடுத்து நாயகத் தோழர்களில் மிகவும் முக்கிய மானவரான அபுபக்கர் சித்திக் எழுந்து நின்று இறைவனது தூதர் அவர்களே கடந்து சென்ற புனித ரமலான் மாதத்தில் நம்மை அழிப் பதற்கு திட்டமிட்ட மக்கமா நகரின் குரைஷிகளை இறைவன் கருணையினால் வெற்றி கொண்டோம். அந்தப் போரின் பொழுது கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 21 பேர் இன்று நமது பராமரிப்பில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து அவர்களை இங்கு கைதிகளாக வைத்துப் பராமரித்து வருவது நமக்கு வீணான பொருள் நஷ்டத்தை அளிப்பதாகும். ஆதலால் அதுபற்றி நாயகம் அவர்கள் இன்று ஒரு முடிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அபுபக்கர் அவர்கள் சொல்வது முற்றிலும் பொருத்தமானதுதான் இங்குள்ள தோழர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தால், இந்த விசயத்திற்கு ஒரு சரியான முடிவுக்கு வரலாம் என்று நாயகம் சொன்னார்கள். திருத்துதர் அவர்களே நமது நாட்டு வழக்கம் என்ன என்பதை தங்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியதில்லை. போரில் பிடிபட்டவர்களை அவர்களிடமிருந்தோ அவர்களது உறவினர் களிடம் இருந்தோ, போரில் கலந்து கொண்டு நம்மவர்களைத் தாக்கி அழித்த குற்றத்திற்காக நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்வது தான் முறை என உமருகத்தாப் என்ற தோழர் தெரிவித்தார். அங்கிருந்தவர்கள் அதனை ஆமோதித்து ஒப்புதல் செய்தார்கள். i. சிறிது நேரம் அமைதியாக இருந்த நாயகம் அவர்கள் தமது கருத்தைச் சொல்லத் தொடங்கினார்கள். உமருகத்தாப் அவர்கள் சொன்னது இதுவரை அரபிநாட்டில் பின்பற்றி வந்த பழைய முறையாகும். ஆனால் நாம் பழமைவாதிகள் அல்ல. மனிதாபிமான உணர்வு மிக்கவர்கள். இந்தப் போர்க் கைதிகளுக்காக ஆயிரக் ந. - 3