பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ4 நபிகள் நாயகம் வழியில் கணக்கான திர்கம் பணத்தைக் கொடுத்து அவர்களை மீட்க முன்வருபவர் எத்தனைபேர்? நிச்சயமாக ஒருவரும் வரமாட்டார். பத்ரு போரில் நம்மிடமிருந்து அவர்கள் தப்பிச் சென்றதே பெரிய விசயம். ஆதலால் அவர்களை மேலும் சிரமப்படுத்துதல் கூடாது. இதற்கான ஓர் எளிய வழி ஒன்றினை நான் சொல்லலாம் என விரும்புகிறேன். 'சொல்லுங்கள் இறைதூதரே தங்களது சொல்லுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்' எனச் சபையில் இருந்தவர்கள் சொன்னார்கள் 'இன்று நம்மிடையே கல்வியறிவு பெற்ற முஸ்லீம்கள் மிகவும் குறைவு. அவர்களுக்கு நாளடைவில் நாம் தான் கல்வி புகட்டுவதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதலால் இப்போது நம்மிடம் உள்ள கைதிகளில் மக்கா நகர் குரைசி கல்வி கற்றவர்களாக இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரும் இங்குள்ள 3 முஸ்லீம்களை இயன்றவரை விரைவில் அரபி மொழியில் எழுதப் படிக்க கற்பித்துக் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு நாம் வழங்கும் தண்டனை மட்டுமல்ல அவர்களது விடுதலைக்கு ஏற்ற வழியாகவும் இருக்கும். நாயகம் சொன்னதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஒருவர் மட்டும் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். உமருகத்தாப் என்ற நாயகத் தோழர், திருத்துதர் அவர்களே, மனிதாபிமான அடிப்படையில் தாங்கள் வழங்கிய தீர்ப்பு மிகவும் ஏற்றமானது என்றாலும் அந்தத் தீர்ப்பினை அந்த 21 கைதிகளில் ஒரே ஒருவருக்குப் பொருந்தாது என அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அந்த ஒருவர் யார்? ஏன்? அவருக்காக இந்த தீர்ப்பினை மாற்ற வேண்டும்? என சொல்லுகிறீர்கள்? என நாயகம் கேட்டார்கள். அதோ அந்த மூலையில் அமர்ந்திருக்கும் 21 பேர்களில் ஒரு பெண்ணும் இருக்கிறாரல்லவா அவர் பெயர் ஹிந்தா என்பது நடந்து முடிந்த பத்ரூபோரில் நமது தரப்பினரை பின்புறமாக நின்று வெட்டி வீழ்த்திய பாதகி மற்றும் நாயகம் அவர்களது சிறிய தந்தையான 'ஹம்சா' என்பவர், போரில் மரணக்காயங்களுடன் வெட்டுப்பட்டு கீழே விழுந்தவுடன் அவர் நெஞ்சைப் பிளந்து அவரின் ஈரலைக் கடித்துத் குதறித்துப்பிய அரக்கி, பெண் குலத்திற்கே களங்கமாக