பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 35 அமைந்துள்ள அந்தப் பெண்ணுக்கு நாயகம் அவர்களது தீர்ப்பு பொருந்துவதாக இருக்கக் கூடாது என்றும் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் உமர் சொல்லி முடித்தார். அனைவரும் அந்த மூலையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைச் சில நொடிகள் நேரம் வெறுப்புடன் நோக்கினர். அடுத்து நாயகம் அவர்கள் என்ன பதில் சொல்லுவார் எனக் கேட்பதற்கு ஆயத்தமானார்கள். நாயகம் அவர்கள் போர் என்பது மனிதனது வெறியாட்டத்தின் கொடுமுடியாக அமைவது. இரு தரப்பினரும் தங்களுக்கு வெற்றி ஏற்பட எவ்வளவு கொடுமைகளைச் செய்ய முடியுமோ அவ்வளவு கொடுமைகளைச் செய்தனர் என்பது போர்களின் வரலாறு. இறைவனின் கருணையைக் கொண்டு மக்கா நகர குரைஷிகளை வெற்றி கொள்ள நமக்கு ஆண்டவன் தொடர்ந்து நன்மைகளை வழங்க வேண்டும் என்பதால் இறைவனின் கருணைக்கு உவந்து மனிதர்களை நண்பராக இருந்தாலும் சரி. எதிரியாக இருந்தாலும் சரி மனிதாபிமானத்துடன் மனிதர்களாக நடத்த வேண்டும். எனது சிறிய தந்தைக்குச் செய்த கொடுமை களுக்காக அந்தப் பெண்ணைப் பழி வாங்கும் வகையில் தண்டிக்க விரும்பவில்லை. அவளும் நம்மிடம் அகப்பட்டுள்ள போர் கைதிகளில் ஒருத்தி என்பதை மறந்துவிடக் கூடாது. நான் முன்பு சொன்ன தீர்ப்பு அனைத்துக் கைதிகளுக்கும் பொதுவானதாகவே இருக்கும்' என்று மீண்டும் நாயகம் அவர்கள் சொல்லி முடித்தார்கள். + + + k + இந்தச் சிந்தனைகள் சுல்த்தான் செய்யது இபுராஹிம் அவர்களது உள்ளத்தில் மிகப் பெரிய அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் அந்தச் சிந்தனைகளில் லயித்திருந்த சுல்த்தான் அவர்கள் மீண்டும் தெளிவு பெற்ற பொழுது அவர்களது உள்ளத்தில் எழுந்து நின்ற எண்ணம் தாமும் தமது பாட்டனாரது வழியை அடியொற்றியவராக அரபுத் தாயகத்திற்கு அப்பாலும் தீன் விளக்கத்தில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பது தான்.

  1. *్మ*