பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 5 பயணம் தொடர்கிறது பல வருடங்கள் ஓடிவிட்டன. சுல்த்தான் அவர்களின் உடலில் தெம்பும் குறைந்து வந்தது. அப்பொழுது அவர்களுக்கு வயது 56 என்றாலும் முதுமையையும், உடல் நலிவையும் புறக்கணித்து விட்டு தாம் பற்றி நின்ற தீன்மார்க்கத்தை பாண்டிய நாட்டில் பிரச்சாரத்தைத் தொடர்வது என்ற உறுதியுடன் செயல்பட்டு வந்தார்கள். பயணத்திற் கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு பயண நாளும் குறிக்கப்பட்டது. அந்த நாளுக்கு முன்னதாகவே பல இளைஞர்கள் பல இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஜித்தா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் பயணம் செய்ய வேண்டிய பெரிய தோணிகள் பல நூறு தோணிகள் புதிதாகக் கட்டப்பட்டன. ஜித்தா துறைமுகத்தி லிருந்து வடக்கே மிக நீண்ட தூரம் இந்தத் தோணிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு அந்தந்த நாடுகளுக்குரிய வண்ணக் கொடிகளுடனும் உறுதியான அகலமான பாய்மரத்திற்கான பாய்களும் பொருத்தப் பட்டன. அந்தத் தோணிகளில் பயண காலத்திற்குத் தேவையான குடிநீர். உணவுப் பண்டங்கள், காய்கறிகள் ஆகியனவும் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. நிர்ணயித்த நாளாகிய ஹிஜிரி 582 ஜமாதுல் ஆஹிர் பிறை 2-இல் ஜித்தா நகரின் மர்கள், பள்ளிவாசலில் காலை நேரத் தொழுகை முடிந்தவுடன், அந்தப் பள்ளியில் ஆலிம் அவர்கள் பாண்டிய நாட்டிற்குப் பயணமாகும் சுல்த்தான் செய்யது