பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4O நபிகள் நாயகம் வழியில் எடுத்துச் சொல்வதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள்' என ஒருமுகமாக அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். அவர்களது ஒப்புதலுக்கு நன்றி தெரிவித்த இப்ராஹிம் விரைவில் அவரின் பயணத்திட்டத்தைத் தெரிவிப்பதாக அவர்களிடம் சொன்னார். அனைவரும் ஆறுதலாகச் சென்றனர். அடுத்து சில நாட்களில் பல கூட்டங்கள் அங்கு நடைபெற்றன. பாண்டிய நாட்டிற்குப் பயணம் புறப்படுவது சம்பந்தமாக எத்தனை தொண்டர்களைச் சேர்த்துக் கொள்வது, எத்தனை தோணிகளைப் பயணத்திற்காக ஏற்பாடு செய்வது, பயண காலத்திற்குத் தேவையான உணவுப் பண்டங்களைச் சேகரிப்பது என்பன போன்ற பலவிபரங்கள் இந்தக் கூட்டங்களில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டன. மற்றும் அன்றைய அரபு நாட்டின் பெரு நகர்களான மக்கா, தாயிப், ஜித்தா ஆகிய நகரங்களிலுள்ள இளைஞர்களையும் மற்றும் அண்டை நாடான சிரியா. எகிப்து, துனிசியா, மொராக்கோ ஆகிய நாடு களுக்கும் தக்க மடல்களை அனுப்பி ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் தமிழ்நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளுடன் அந்தந்த நாட்டு இளைஞர்கள் கலந்து கொள்வது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப் பட்டன. செய்திப் போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் அந்த நாடுகளை எல்லாம் தொடர்புகொண்டு விபரங்களைப் பெறுவது என்பது மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. இதனால் மாதங்களும், வருடங்களும் பல கழிந்து விட்டன. பாண்டிய நாட்டுப் பயணம் எப்போது என்பதுதான் சுல்த்தான் செய்யது இபுராகிமின் சிந்தனையை இரவு பகலாக அலைக்கழித்துக் கொண்டிருந்தது.